- Home
- Tamil Nadu News
- சொந்தமாக தொழில் தொடங்க ரூ.3 லட்சம்.! வங்கி கணக்கில் விழப்போகுது- அரசின் அசத்தலான அறிவிப்பு
சொந்தமாக தொழில் தொடங்க ரூ.3 லட்சம்.! வங்கி கணக்கில் விழப்போகுது- அரசின் அசத்தலான அறிவிப்பு
தமிழக அரசு, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு ஆடையகம் தொடங்க ரூ.3 லட்சம் மானியம் வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பெண்கள் சுயதொழில் செய்து பொருளாதார மேம்பாடு அடையலாம்.

தமிழக அரசின் மானிய உதவி திட்டங்கள்
தமிழக அரசு சார்பாக வேலை இல்லாதவர்களுக்கு உதவிடும் வகையில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தொழில் தொடங்க பயிற்சிகள் வழங்கி கடன் உதவி திட்டங்களையும் செயல்படுத்துகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு எப்போதும் சிறு தொழில்கள், தொழில்முனைவோர் வளர்ச்சிக்கு துணை நின்று வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக, பெண்கள் மற்றும் இளைஞர்கள் சுயதொழில் செய்து முன்னேற அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறது. தற்போது, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் தொழில் தொடங்க ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆடையகம் அமைக்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடையகம் அமைக்க நிதி உதவி
தையல் தொழிலில் ஆர்வமுள்ள பெண்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆடையகம் அமைத்து தொழிலை முன்னேற்ற அரசு நேரடி மானியத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திட்டத்தின் சிறப்பம்சம், சிறு அளவிலான பெண்கள் குழுக்கள் கூடுதலான முதலீடு இன்றி அரசு வழங்கும் உதவியுடன் தங்களுக்கென தனித்தொழில் தொடங்கும் வாய்ப்பு பெறுவதாகும். இதன் மூலம் வேலை வாய்ப்பு உருவாகுவதோடு, குடும்பத்தின் பொருளாதார நிலையும் மேம்படும்.
இந்த மானியத்தின் மூலம் பெண்கள் தையல் தொழிலைத் தொடங்கி, பள்ளி யூனிஃபார்ம், சீருடை, நிறுவன உத்தியோகப் பொருட்கள் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்ய முடியும். இதன் மூலம் உள்ளூர் அளவில் வேலை வாய்ப்பும், வருமானமும் அதிகரிக்கும். மேலும், தொழில்முனைவர் திறன் மேம்பட்டு, தன்னம்பிக்கையுடன் சுயமாக வாழ்வதற்கான தளம் அமையும்.
திட்ட நிபந்தனைகள்
குறைபட்ச வயது 20 ஆக உள்ள 10 நபர்கள் கொண்ட குழுவாக இருத்தல் வேண்டும்.
சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்துறை மூலம் பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை.
குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர்களாக இருக்க வேண்டும்.
குழு உறுப்பினர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. | லட்சம்.
திட்டத்தின் பயன்கள்:
தமிழ்நாடு அரசு வழங்கும் இந்த ரூ.3 லட்சம் மானிய ஆடையகம் அமைக்கும் திட்டம், குறிப்பாக பெண்களுக்கு பெரும் ஆதரவாக அமைகிறது. பொருளாதார ரீதியில் பல குடும்பங்கள் முன்னேறுவதற்கு இது ஒரு பொற்கால வாய்ப்பாகும். தையல் திறமை கொண்ட பெண்கள், இளைஞர்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
அரசு நலத்திட்டங்கள் தரும் இத்தகைய ஊக்குவிப்புகள், எதிர்காலத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் தொழில்முனைவோர்களை உருவாக்கும். எனவே இந்த திட்டத்தில் பயன் பெற தகுதியானவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.