MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கை நிறைய கொட்டும் பணம்.! பேக்கரி ஷாப் தொடங்க சூப்பர் சான்ஸ்-தமிழக அரசு அசத்தலான அறிவிப்பு

கை நிறைய கொட்டும் பணம்.! பேக்கரி ஷாப் தொடங்க சூப்பர் சான்ஸ்-தமிழக அரசு அசத்தலான அறிவிப்பு

தமிழக அரசு, தினை வகைகளைக் கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் 4 நாட்கள் பயிற்சியை சென்னையில் வழங்குகிறது. பயிற்சியில், தயாரிப்பு முறைகள், சந்தைப்படுத்துதல், அரசு உதவிகள் மற்றும் மானியங்கள் குறித்து விளக்கப்படும்.

2 Min read
Author : Ajmal Khan
Published : Jul 08 2025, 07:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு
Image Credit : our own

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு

ஒவ்வொரு நாளும் பல லட்சம் பேர் வேலை தேடி பல இடங்களுக்கு அலைந்து திரிகிறார்கள். அவர்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. படித்த படிப்பிற்கு ஏற்ப வேலை வழங்கிட தனியார் துறை மூலம் வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. 

சொந்த ஊரிலேயே வேலை கிடைத்திட அந்த அந்த மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி பல லட்சம் பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அடுத்ததாக சொந்த தொழில் தொடங்க திட்டமிடுபவர்களுக்காக பயிற்சியும் வழங்கி கடன் உதவிக்கான வழிகாட்டப்படுகிறது. அந்த வகையில் சொந்தமாக பேக்கரி ஷாக் தொடங்க திட்டமிடுபவர்களுக்காக அசத்தலான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
பேக்கரி தொழில் தொடங்க பயிற்சி
Image Credit : our own

பேக்கரி தொழில் தொடங்க பயிற்சி

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 4 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி வருகிற 21.07.2025 முதல் 24.07.2025 தேதி வரை காலை 9.30 மணி முதல் மதியம் 6.00 மணி வரை இந்த பயிற்சி நடைபெற உள்ளது. 

இப்பயிற்சியில் பேக்கரி பொருட்களின் ராகி நெய் குக்கீகள் சத்துமாவு குக்கீகள், சோளம் பிஸ்தா குக்கீகள் (சோலம்), பர்னார்ட் ஜீரா குக்கீகள் (குதிரைவாளி), மசாலா குக்கீகள், முழு கோதுமை ரொட்டி, பழ ரொட்டி, கோதுமை தேங்காய் குக்கீகள், முத்து சோக்கோ தினை குக்கீகள் (கம்பு), ராகி சாக்கோ ரொட்டி, ராகி பிரவுனி, குதிரைவாலி தினை பிரவுனி, கருப்புகோவ்னி தினை பிரவுனி, பல தினை வால்நட் பிரவுனி,

Related Articles

Related image1
வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய போறீங்களா? வருமான வரித்துறை நோட்டீஸ் கொடுக்கலாம் கவனமா இருங்க
Related image2
9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்யாதீங்க! ஊழியர்களை எச்சரிக்கும் இன்ஃபோசிஸ்!
34
பேக்கரி பொருட்கள் தயாரிக்க பயிற்சி
Image Credit : our own

பேக்கரி பொருட்கள் தயாரிக்க பயிற்சி

டேட்ஸ் தினை பிரவுனி, கோதுமை பிளம் கேக், ராகி சாக்லேட் கேக், ஜோவர் கேரட் கேக் (Cholam cake), ஃபாக்ஸ்டெயில் மற்றும் டேட்ஸ் கேக் (தினை), கோடோ முந்திரி தினை குக்கீகள் (வரகு), சிறிய முந்திரி தினை குக்கீகள் (சாமை), ராகி தினை ரொட்டி, பல தானிய ரொட்டி,வாழைப்பழம் வால்நட் கேக், தினை வெல்லம் வெண்ணெய் கேக், 

முழு கோதுமை பீட்சா, முழு கோதுமை பூண்டு ரொட்டி, ராகி கருப்பு காடு கேக், பட்டர்கிரீம் ஃப்ரோஸ்டிங்குடன் தினை வெண்ணிலா கேக் வகைகள் எப்படி தயாரிப்பது பற்றி இப்பயிற்சியில் விளக்குவார்கள். மேலும் தயாரிப்பு சந்தைப்படுத்துதலின் அம்சங்கள் பேக்கிங் லேபிளிங் மற்றும் அதற்காண விலை வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும். அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும்.

44
பயிற்சி முகாமில் கலந்து கொள்ள அழைப்பு
Image Credit : our own

பயிற்சி முகாமில் கலந்து கொள்ள அழைப்பு

இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

 மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி /கைபேசி எண்கள். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், - சென்னை 600032. 8668102600/7010143022. இந்த பயிற்சியில் பங்கேற்க முன்பதிவு அவசியம் எனவும், அரசு சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தமிழ் செய்திகள்
வேலை வாய்ப்பு
வேலைவாய்ப்பு

Latest Videos
Recommended Stories
Recommended image1
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Recommended image2
Tamilnadu Power Cut: செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! நாளை காலை 9 மணி முதல் மின்தடை! எந்தெந்த பகுதிகளில்?
Recommended image3
Now Playing
திமுகவுடன் ஆட்சி என்று யாரும் சொல்லவில்லை...MLA காமராஜ் சொல்லுவது எல்லாம் பொய்! TTV தினகரன் பேட்டி
Related Stories
Recommended image1
வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய போறீங்களா? வருமான வரித்துறை நோட்டீஸ் கொடுக்கலாம் கவனமா இருங்க
Recommended image2
9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்யாதீங்க! ஊழியர்களை எச்சரிக்கும் இன்ஃபோசிஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved