- Home
- Tamil Nadu News
- மாநகராட்சி கவுன்சிலர்கள் 4 பேர் டிஸ்மிஸ்.! எந்த கட்சியை சேர்ந்தவர்கள் .? எதற்காக தெரியுமா.?
மாநகராட்சி கவுன்சிலர்கள் 4 பேர் டிஸ்மிஸ்.! எந்த கட்சியை சேர்ந்தவர்கள் .? எதற்காக தெரியுமா.?
சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் உட்பட 4 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அரசின் திட்டங்களை செயல்படுத்தாதது, முறைகேடு செய்தது போன்ற காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Councillor disqualification : அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க கவுன்சிலர்களின் பங்கு முக்கியமானது. அந்த வகையில் தெருவில் குடிநீர் குழாய் அமைப்பது, தெருவில் சாலைகள் அமைப்பது. கழிவுநீர் கால்வாய் அமைப்பது உள்ளிட்ட மக்களின் அன்றாட தேவைகளாக உள்ள பிரச்சனைகளில் முக்கிய பங்கு வகிப்பது கவுன்சிலர்கள் ஆவார்கள். அதே நேரம் மக்களுக்கு தேவையான திட்டங்களை உரிய வகையில் செயல்படுத்தாதது, அரசு பணத்தில் முறைகேடு செய்வது என பல மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை நீக்கவும் தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது.
4 கவுன்சிலர்கள் பதவி நீக்கம்
அந்த வகையில் சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட 4 பேர் கவுன்சிலர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
நமது மாநிலத்தின் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள், அதாவது, மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஆகியவை 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் கீழ் நிருவகிக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவியில் இருந்து நீக்க அதிகாரம்
இதன் படி நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் நிருவாகம் தொடர்பான 1998 ஆம் ஆண்டு சட்டத்தின் வகைமுறைகளை மீறும் வகையில் செயல்படும் மேயர்கள், துணை மேயர்கள், மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், மண்டலக்குழுத் தலைவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அச்சட்டம் அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் வகைமுறைகளை மீறி செயல்பட்ட நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 பிரதிநிதிகள் மீது அரசு. அச்சட்டத்தின் பிரிவு 52-ன்கீழ் உரிய நடைமுறைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட கவுன்சிலர்கள் யார்,?
நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் அவரவர் வகித்துவந்த பதவியிலிருந்து நீக்கம் செய்து ஆணையிட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி
(1) வ.பாபு. 189-வது வார்டு உறுப்பினர். பெருநகர சென்னை மாநகராட்சி.
(2) கே.பி.சொக்கலிங்கம், 5-வது வார்டு உறுப்பினர். பெருநகர சென்னை மாநகராட்சி.
(3) ச.ஜெயபிரதீப். 40-வது வார்டு உறுப்பினர் மற்றும் 3-வது மண்டலக்குழுத் தலைவர். தாம்பரம் மாநகராட்சி.
(4) க.சகுந்தலா. 11-வது வார்டு உறுப்பினர் மற்றும் உசிலம்பட்டி நகர்மன்ற தலைவர்.
எந்த கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள்.?
கவுன்சிலர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் 2 பேர் திமுகவை சேர்ந்தவர்களாவர். உசிலம்பட்டி நகர்மன்ற தலைவரும் திமுகவை சேர்ந்தவர், மற்றொருவர் தாம்பரம் மாநகராட்சி சுயேட்சை கவுன்சிலராக உள்ளார்.