- Home
- Tamil Nadu News
- 20 முதல் 30 லட்சம் ரூபாய் வரை.! 3 % வட்டியில் கல்வி கடன்- உடனே விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு
20 முதல் 30 லட்சம் ரூபாய் வரை.! 3 % வட்டியில் கல்வி கடன்- உடனே விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை கல்விக் கடன் வழங்குகிறது. இந்தக் கடன் தொழிற்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பட்டப்படிப்புகளுக்குப் பயன்படுத்தப்படலாம்.

20 முதல் 30 லட்சம் ரூபாய் வரை கல்வி கடன்
கல்வி தான் எதிர்காலை தலைமுறையை நல்வழிப்படுத்தும் அந்த வகையில் ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை படிக்க ஏழை, எளிய மாணவர்கள், ஆதி திராவிட மாணவர்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளும், கல்வி நிதி உதவி திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் பல்வேறு உதவி திட்டங்களின் மூலம் படிக்க வழி வகை செய்யப்படுகிறது. அந்த வகையில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு உரிய வகையில் கல்வி கட்டணம் கட்ட முடியாத காரணத்தால் பாதியிலேயே கல்வியை நிறுத்தும் நிலை ஏற்படுகிறது.
கடனுதவி வழங்கும் தமிழக அரசு
இதனை கருத்தில் கொண்டு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்(TAMCO)மூலம் கல்வி கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சிறுபான்மையின மாணவ / மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி / வேலை வாய்ப்பு / பட்டப் படிப்பு பயில்பவர்களுக்கு கல்விக் கடனுதவி வழங்கப்படுகிறது. இதற்காக 20 லட்சம் முதல் 30 லட்சம் வரை கடனுதவி வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
நிபந்தனைகள் என்ன.?
தகுதியான கட்டணங்கள்:
1. சேர்க்கைக் கட்டணம் / பயிற்றுவிப்புக் கட்டணம். 2. புத்தகம், எழுதுபொருள் மற்றும் படிப்புக்குத் தேவையான உபகரணங்கள். 3. தேர்வுக் கட்டணம். 4. விடுதி மற்றும் உணவுக் கட்டணம் (விடுதியில் தங்கி பயில்பவர்களுக்கு மட்டும்)
விண்ணப்பிக்கும் இடம்:
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரகம் / மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் / மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் / நகர கூட்டுறவு வங்கி / தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி.
விண்ணப்பிப்பதற்கான ஆவணங்கள்:
1. மதத்திற்கான சான்று: சாதிச் சான்றிதழ் /பள்ளி மாற்றுச் சான்றிதழ் / சிறுபான்மையினர் மதம் குறித்து வழிப்பாட்டு ஸ்தலத்தால் அளிக்கப்பட்ட சான்று இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல். 2. வருமானச் சான்றிதழ் நகல். 3. இருப்பிடச் சான்றிதழ் நகல்
4. ஆதார் சான்றிதழ் நகல். 5. உண்மைச் சான்றிதழ் (Bonafide Cerificate) நகல். 6. கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது/ செலான் (Original) 7. மதிப்பெண் சான்றிதழ் நகல் 8. வங்கி கோரும் இதர ஆவணங்கள்
கல்வி கடன் எவ்வளவு.?
திட்டம்-1
பெற்றோர் மற்றும் பாதுகாவலரின் ஆண்டு வருமாணசம் ரூ.3,00,000 வரை இருந்தால் தொழிற்கல்வி / வேலைவாய்ப்புப் பட்டப்படிப்புகள் (அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்கு) ஆண்டிற்கு ரூ.4 இலட்சம் வீதம் அதிகபட்சம் ரூ.20 இலட்சம் வரை கல்வி கடன் வழங்கப்படுகிறது.
வெளிநாடுகளில் தொழிற்கல்வி அல்லது வேலைவாய்ப்புபடிப்புகளுக்கு அதிகபட்சம்5 ஆண்டுகளுக்கு ஆண்டிற்கு ரூ.6 இலட்சம் வீதம் அதிகபட்சம் ரூ.30 இலட்சம் வரையும் கல்வி கடன் வழங்கப்படுகிறது. இதற்கு ஆண்டுக்கு வட்டி விகிதம் 3% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வி கடன் வட்டி என்ன.?
திட்டம்-2
பெற்றோர்/பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.8,00,000/- வரைக்கும் மிகாமல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி தொழிற்கல்வி / வேலைவாய்ப்புப் பட்டப்படிப்புகள் (அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்கு) ஆண்டிற்கு ரூ.4 இலட்சம் வீதம் அதிகபட்சம் ரூ.20 இலட்சம் வரை கல்வி கடன் வழங்கப்படுகிறது. தொழிற்கல்வி / வேலைவாய்ப்புப் பட்டப்படிப்புகள் (அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்கு) ஆண்டிற்கு ரூ.4 இலட்சம் வீதம் அதிகபட்சம் ரூ.20 இலட்சம் வரை கல்வி கடன் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு ஆண்டிற்கு 8 % வட்டியும், மாணவியர்களுக்கு 5% வட்டியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.