- Home
- Tamil Nadu News
- அடி தூள்.! இனி யாருக்கும் மிஸ் ஆகாது.! பெங்களூர் ஐஐஎம்மில் அலுவலர்களுக்கு பயிற்சி- தமிழக அரசு அசத்தல்
அடி தூள்.! இனி யாருக்கும் மிஸ் ஆகாது.! பெங்களூர் ஐஐஎம்மில் அலுவலர்களுக்கு பயிற்சி- தமிழக அரசு அசத்தல்
தமிழக அரசின் திட்டங்கள் சரியாக மக்களைச் சென்றடைகிறதா என்பதை ஆராயவும், தகுதியான பயனாளிகள் யாரும் விடுபடவில்லையா என்பதை உறுதி செய்யவும், அரசு அலுவலர்களுக்கு தரவுப் பகுப்பாய்வு பயிற்சி அளிக்கப்படும். இதற்காக, ஐம்பது லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூர் ஐஐஎம்மில் அலுவலர்களுக்கு பயிற்சி- தமிழக அரசின் அசத்தல்
தமிழக அரசின் சார்ப்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டமானது அனைத்து தரப்பு மக்களுக்கும் சரியாக சென்று சேர்கிறதா என்பது கேள்வி குறிதான். அந்த வகையில் உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு திட்டங்கள் சென்று சேர்வதில்லையென புகாரும் வெளியாகி வருகிறது. இந்த நிலையிலை தான் அரசுத் திட்டங்களை மேலும் செம்மைப்படுத்தவும் அரசு அலுவலர்களுக்கு தரவுப் பகுப்பாய்வு பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தமிழக அரசின் திட்டங்கள்
நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் 2024-2025 ஆம் ஆண்டிற்கான மனித வள மேலாண்மைத் துறையின் மானிய கோரிக்கையின் போது 26.06.2024 அன்று சட்டமன்றத்தில் "அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் முறையாக மக்களிடம் சென்றடைகிறதா என்பதனை ஆய்வு செய்யவும், தகுதியுடைய பயனாளிகள் எவரேனும் விடுபட்டு விட்டனரா என்பதை கண்டறியவும், கடைக்கோடி மக்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்றடையவும்,
50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு
இதன் வாயிலாக அரசுத் திட்டங்களை மேலும் செம்மைப்படுத்தவும் அரசு அலுவலர்களுக்கு தரவுப் பகுப்பாய்வு (Data Analysis) குறித்து சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். இந்நிதியாண்டில் இதற்கென ஐம்பது இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும்". எனும் அறிவிப்பை வெளியிட்டார்கள். இந்த அறிவிப்பினை நடைமுறைப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இவற்றின் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் நிதித்துறையின் முதன்மைச் செயலாளர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி,
வரலாற்றிலேயே முதல் முறையாக பயிற்சி
தமிழ்நாடு அரசின் வரலாற்றிலேயே முதல் முறையாக பல்வேறு அரசுத் துறைகளின் புள்ளி விவரங்களை அறிவியல் முறையில் தொகுத்தல் குறித்து பெங்களூருவில் உள்ள இந்திய மேலாண்டை நிறுவனம் (Indian Institute of Management (IIM). Bangalore) "Business Analytics Science of Data Driven Decision Making 12.02.2025 முதல் 14.02.2025 வரை மூன்று நாள்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளில் பங்கேற்பதற்காக பல்வேறு அரசுத்துறைகளிலிருந்து 25 அலுவலர்கள் தமிழ்நாடு அரசினால் அனுப்பப்பட்டுள்ளனர்.
அரசு துறை அதிகாரிகள் பங்கேற்பு
இவர்கள் முதல்வரின் முகவரித் துறை, தமிழ்நாடு மின் ஆளுமை. கூட்டுறவுத்துறை, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை, கருவூலம் மற்றும் கணக்குத் துறை. வணிகவரித் துறை, சென்னை மநாகராட்சி. பேரூராட்சிகள் இயக்ககம், பதிவுத்துறை, மின் பகிர்மானக் கழகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, காவல் துறை, மனிதவள மேலாண்மைத் துறை, தமிழ்நாடு குற்ற ஆவணக் காப்பகம், வேளாண் துறை, ஆகிய துறைகள் சார்ந்த அரசு அலுவலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பயிற்சிக்காக தமிழ்நாடு அரசு மொத்தம் 35 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்
இந்தியாவிற்கே முன்னோடியாக பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள் இவ்வரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் அனைத்தும் யாருக்கும் விடுபடாமல் கடைக்கோடி மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளபடி இப்பயிற்சித் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.