- Home
- Tamil Nadu News
- இந்த சூப்பர் வாய்ப்பை தவறவிட்டுடாதீங்க! 10ம் வகுப்பு படித்தாலே போதும்! லட்சம் லட்சமாய் சம்பாதிக்கலாம்.!
இந்த சூப்பர் வாய்ப்பை தவறவிட்டுடாதீங்க! 10ம் வகுப்பு படித்தாலே போதும்! லட்சம் லட்சமாய் சம்பாதிக்கலாம்.!
தமிழ்நாடு அரசு, சென்னையில் டிசம்பர் 1 முதல் 3 வரை 'மீடியா ட்ரோன் பயிற்சி'யை வழங்குகிறது. ட்ரோன் சினிமாடோகிராஃபி, பாதுகாப்பு விதிகள் மற்றும் பல்வேறு தொழில் வாய்ப்புகள் குறித்து இதில் கற்பிக்கப்படும். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

மீடியா ட்ரோன்
தற்போதைய காலக்கட்டத்தில் திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் விளம்பரத் துறைகளில் ட்ரோன் பயன்பாடு இன்று மிக முக்கியமானதாக மாறியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் தொழில் முனைவோருக்கான ‘மீடியா ட்ரோன் பயிற்சி’ வரும் டிசம்பர் 1 முதல் 3 தேதி வரை மூன்று நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பயிற்சி நடைபெற உள்ளது.
பயிற்சி நோக்கம் / சிறப்பம்சங்கள்:
• ட்ரோன் தொழில்நுட்பம் – அறிமுகம்
• ட்ரோன் சினிமாடோகிராஃபி நுட்பங்கள்
• வானிலிருந்து(Aerial Photography) புகைப்படம் – அறிமுகம்
• FPV சினிமாடோகிராஃபி
• DGCA விதிமுறைகள் மற்றும் விமான பாதுகாப்பு
மீடியா ட்ரோன் பைலட்டுகளுக்கான தொழில் வாய்ப்புகள்:
* திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு.
* செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள்.
* ஆவணப்பட தயாரித்தல்.
* விளம்பரம் மற்றும் மார்க்கெட்டிங்.
* கார்ப்பரேட் திரைப்படங்கள்.
* யூடியூப் மற்றும் சமூக ஊடக உள்ளடக்க உருவாக்கம்.
* காவல் மற்றும் ராணுவ கண்காணிப்பு.
* நிகழ்ச்சி செய்தி களிப்பு.
* சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை.
* ரியல் எஸ்டேட் புகைப்படம் / வீடியோ தயாரித்தல்.
* தொழிற்துறை புகைப்படம்.
* காடு மற்றும் விலங்கியல் புகைப்படம்.
* தீ மற்றும் மீட்பு பணிகள்.
* அரசுத் திட்டங்கள்.
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
மத்திய / மாநில அரசுகள் வழங்கும் நிதியுதவி திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்த விவரங்களும் பயிற்சியின் ஒரு பகுதியாக விளக்கப்படும். இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் (ஆண்/பெண் /திருநங்கைகள்/ திருநம்பிகள்) 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். குறைந்த பட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்கு பெறும் பயனாளிக்கென குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.
பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்
மேலும், இப்பயிற்சியின் கூடுதல் விவரங்களைப் பெறவும் மற்றும் முன்பதிவு செய்திடவும் www.editn.tn என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளவும்.கைபேசி 9360221280 / 9840114680 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும். (திங்கள் முதல் வெள்ளி வரை ) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை. தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை - 600 032. பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

