MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஒரு நாளைக்கு 800 ரூபாய் சம்பளம்! 50,000 தொழிலாளர்களுக்கு பயிற்சி! பிரமிக்க வைக்கும் தமிழக அரசு!

ஒரு நாளைக்கு 800 ரூபாய் சம்பளம்! 50,000 தொழிலாளர்களுக்கு பயிற்சி! பிரமிக்க வைக்கும் தமிழக அரசு!

தமிழ்நாடு அரசு, கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 50,000 தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், தொழிலாளர்களுக்கு தினசரி ஊதியம், உணவு மற்றும் பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படுகிறது. 

2 Min read
Author : vinoth kumar
Published : Nov 28 2025, 08:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழக அரசு
Image Credit : Google

தமிழக அரசு

தமிழக அரசு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் சூப்பரான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 50,000 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டதாக தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

25
 தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம்
Image Credit : google

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம்

அதாவது தமிழ்நாடு முதலமைச்சர் 2030-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலராக உருவாக வேண்டும் என பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். பொருளாதார வளர்ச்சியில் மனித வளத்தின் திறன் மேம்பாடு மிகவும் அவசியம் என்பதால் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கட்டுமானம், கம்பி வளைப்பு, தச்சு, மின்பணியாளர், பிளம்பர், வெல்டர், பிளாக் ஸ்மித், வர்ணம் பூசுதல், ஏசி மெக்கானிக், கண்ணாடி அமைத்தல், சலவைக்கல் ஒட்டுதல் உள்ளிட்ட தொழில் இனங்களில் ரூ.45.21 கோடி செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள்.

Related Articles

Related image1
ஆசை ஆசையாய் முதலிரவு ரூமுக்கு சென்ற மணமகன்! அலறி கூச்சலிட்ட புதுப்பெண்! சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
Related image2
உருவானது டிட்வா புயல்! வட தமிழகத்தில் ருத்தர தாண்டவம் ஆடப்போகும் மழை! முக்கிய அப்டேட் கொடுத்த வானிலை மையம்!
35
50,000 தொழிலாளர்கள்
Image Credit : Getty

50,000 தொழிலாளர்கள்

அதனை செயல்படுத்திடும் விதமாக, கட்டுமானத் தொழிலாளர்களுக்கான ஏழு நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள பயிற்சி மையத்தில் 22.09.2025 அன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி. வி. கணேசன் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 50,000 தொழிலாளர்கள் பயன் பெற ஏதுவாக தெரிவு செய்யப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது.

45
ஊதியம் மற்றும் தினசரி உணவு
Image Credit : Asianet News

ஊதியம் மற்றும் தினசரி உணவு

ஒவ்வொரு தொழிலாளிக்கும் நாளொன்றுக்கு ரூ.800வீதம் ஊதியம் மற்றும் தினசரி உணவு பயிற்சி காலத்தின் போது வழங்கப்படுகிறது. இப்பயிற்சியின் மூலம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு புதிய தொழில் நுட்பங்கள், டிஜிட்டல் அளவிடும் கருவிகள் பயன்பாடு, சுயதொழில் வாய்ப்பு, பணியிட பாதுகாப்பு, உடல் நலன் பேணுதல், அயல்நாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேமிப்பு குறித்து பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

55
21,334 கட்டுமானத் தொழிலாளர்கள் பங்கேற்ப்பு
Image Credit : our own

21,334 கட்டுமானத் தொழிலாளர்கள் பங்கேற்ப்பு

பயிற்சி நிறைவு பெற்றபின் திறன் மதிப்பீடு செய்யப்பட்டு சான்று வழங்கப்படுகிறது. இப்பயிற்சிகளைப் பெறுவதன் மூலம் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்களது திறனையும் தொழில் தரத்தையும் மேம்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் செப்டம்பர் 22 முதல் நவம்பர் 18 வரையில் வழங்கப்பட்ட பயிற்சியில் இதுவரை 21,334 கட்டுமானத் தொழிலாளர்கள் பங்கேற்று பயன் பெற்றுள்ளனர். எஞ்சியுள்ள பயிற்சி இலக்கை டிசம்பர் 2025-க்குள் நிறைவு செய்திட தொழிலாளர் துறை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு அரசு
மு. க. ஸ்டாலின்
பயிற்சிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Recommended image2
ரூ.70,000 ஊக்கத்தொகை முதல் ஒரு லட்சம் பரிசுத் தொகை வரை.! லிஸ்ட் போட்ட தமிழக அரசு
Recommended image3
கல்வியில் சிறந்த தமிழ்நாடு.. புதிய உயரங்களை அடைவதில் பெருமிதம் கொள்வோம்..! முதல்வர் பெருமிதம்
Related Stories
Recommended image1
ஆசை ஆசையாய் முதலிரவு ரூமுக்கு சென்ற மணமகன்! அலறி கூச்சலிட்ட புதுப்பெண்! சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
Recommended image2
உருவானது டிட்வா புயல்! வட தமிழகத்தில் ருத்தர தாண்டவம் ஆடப்போகும் மழை! முக்கிய அப்டேட் கொடுத்த வானிலை மையம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved