- Home
- Tamil Nadu News
- சென்னை
- ஆசை ஆசையாய் முதலிரவு ரூமுக்கு சென்ற மணமகன்! அலறி கூச்சலிட்ட புதுப்பெண்! சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
ஆசை ஆசையாய் முதலிரவு ரூமுக்கு சென்ற மணமகன்! அலறி கூச்சலிட்ட புதுப்பெண்! சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
சென்னையில் முதலிரவின் போது தாம்பத்திய உறவுக்கு மறுத்த புதுப்பெண்ணை, அவரது கணவர் சுத்தியலால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண், கணவருக்கு வேறொரு பெண்ணுடன் ரகசிய உறவு இருந்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை புரசைவாக்கம் பார்த்தசாரதி தெருவை சேர்ந்தவர் அகஸ்டின் ஜோஸ்வா (33). இவருக்கும், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும் கடந்த 23-ம் தேதி இரு வீட்டார் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து பல்வேறு ஆசைகளுடன் புதுப்பெண் கணவர் வீட்டிற்கு வந்தார்.
இந்நிலையில் கடந்த 24ம் தேதி அன்று முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரூமுக்குள் நுழைந்தவுடன் புதுமாப்பிள்ளை அகஸ்டின் ஜோஸ்வா தாம்பத்திய உறவுக்கு அழைத்துள்ளார். ஆனால், புதுப்பெண் உறவுக்கு மறுத்துள்ளார். முதலில் மனம் விட்டு பேசுவோம் என்று கூறியுள்ளார். ஆனால், அகஸ்டின் ஜோஸ்வா அதற்கு சம்மதிக்கவில்லை. தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார்.
புதுப்பெண் தற்போது தாம்பத்தியம் வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால், ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அகஸ்டின் ஜோஸ்வா ரூமில் இருந்த சுத்தியால் கைகள், கால்கள் மற்றும் நெற்றியிலும் புதுப்பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். வலியால் அலறி துடித்த புதுப்பெண் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அதற்குள் அகஸ்டின் ஜோஸ்வா புதுப்பெண்ணை அப்படி விட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர் உறவினர்கள் புதுப்பெண்ணை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து புதுமாப்பிள்ளை அகஸ்டின் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே நேற்று புதுப்பெண் மீது தாக்குதல் நடத்திய சுத்தியலோடு அகஸ்டின் ஜோஸ்வா வேப்பேரி காவல் நிலையத்துக்கு வந்தார். அப்போது அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுப்பெண் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண்ணிடமும் அவருக்கு ரகசிய உறவு இருந்ததாக குற்றம்சாட்டினார். அவர் என்னிடம் மனம் விட்டு பேசாமல், என்னோடு உறவு வைப்பதிலேயே குறியாக இருந்தார். அது எனக்கு பிடிக்கவில்லை. அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக என் மீது தாக்குதலில் ஈடுபட்டார். நல்ல வேளையாக நான் உயிர் பிழைத்தேன். இனிமேல் அவரோடு வாழமுடியாது என்ற முடிவுக்கு வந்துள்ளேன் என தெரிவித்தார்.

