5 நிமிடத்தில் ரேஷன் கார்டில் மாற்றம் செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு
தமிழகத்தில் சுமார் 2 கோடிக்கு மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ள நிலையில், தற்போது புதிதாக 1.54 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே பெயர், முகவரி போன்ற திருத்தங்களுக்கான சிறப்பு முகாம்கள் தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ration shop
மானிய விலையில் உணவு பொருட்கள்
ஏழை எளிய மக்கள் பயன் அடையும் வகையில் நாடு முழுவதும் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. அதன் படி தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்களில் மொத்தமாக 35083 ரேஷன் கடைகள் உள்ளது. இந்தக் கடைகளில் 2 கோடியே 25 லட்சத்தி 24 ஆயிரத்து 784 குடும்ப அட்டைகள் உள்ளன.
இதன் மூலம் 7 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மானிய விலையில் உணவு பொருட்களை வாங்கி வருகிறார்கள். ரேஷன் கார்டுகள் இருந்தால் மட்டுமே அரசின் திட்டங்களை உடனடியாக பெற முடியும். அந்த வகையில் மகளிர் உரிமை தொகை திட்டமாக இருந்தாலும், பொங்கல் பரிசு தொகுப்பாக இருந்தாலும் ரேஷன் அட்டை அத்தியாசியமானது.
குடும்ப அட்டைகள் திருத்தம்
அந்த வகையில் தற்போது புதிதாக 1.54 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ரேஷன் கார்டில் உள்ள நபர்களின் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் உள்ளிட்ட பல வித குறைபாடுகளை சரி செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள். அந்த வகையில் ரேஷன் அட்டையில் உடனடியாக திருத்தம் செய்யும் வகையில் அனைத்து முக்கிய அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ள சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக உணவு பொருள் வழங்கல் துறை பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ration card special camp
ரேஷன் கார்டில் திருத்தம்- சிறப்பு முகாம்
அதன் படி, பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என தமிழக அரசு சார்பாக அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து டிசம்பர் 2024 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் வருகிற (14.12.2024) சனிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ration card correction
முகவரி, பெயர் திருத்தம்
இந்த குறைதீர் முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும் எனவும்,
RATION CARD
புகார் தெரிவிக்க அழைப்பு
மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.