MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கலைஞர்களுக்கு 10000 முதல் 20000 ரூபாய்.! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் திட்டம்- உடனே விண்ணப்பிங்க

கலைஞர்களுக்கு 10000 முதல் 20000 ரூபாய்.! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் திட்டம்- உடனே விண்ணப்பிங்க

தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பில் ஓவியர்கள் மற்றும் சிற்பிகளுக்குப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த 50 ஓவியங்கள், சிற்பங்களுக்குப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படும். ஓவிய, சிற்பக் கலைஞர்கள் www.artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

2 Min read
Author : Ajmal Khan
Published : Nov 11 2024, 07:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழக அரசின் சூப்பர் திட்டம்

தமிழக அரசு சார்பாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் திரைக்கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள், ஓவியக்கலைஞர்களை கவுரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கலை பண்பாட்டு துறை சார்பில் ஓவியர்கள் மற்றும் சிற்பிகளுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி சிறந்த 50 ஓவியங்கள், சிற்பங்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. தமிழக சட்டமன்றத்தில் கடந்த நிதி நிலை அறிக்கையின் போது மாநில அளவிலான ஓவிய-சிற்பக்கலைக்காட்சியை  நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

25
drawing

drawing

சிறந்த கலைஞர்களுக்கு பரிசு

இதற்காக மாநில அளவிலான ஓவிய-சிற்பக் கலைக்காட்சி நடத்தி, ஓவியக்கலை பிரிவில் சிறந்த கலைப்படைப்புகள் வழங்கும் கலைஞர்களுக்கு 20ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை பரிசுகள் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2024-2025-ம் நிதியாண்டில் மாநில அளவிலான ஓவியம் மற்றும் சிற்பக் கலைக்காட்சி நடத்தி முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து  ஓவியக்கலை பிரிவில் சிறந்த கலைப்படைப்புகளை உருவாக்கி வழங்கும் 36 வயதுக்கு மேற்பட்ட 15 மூத்த கலைஞர்களுக்கு தலா 20,000 ரூபாயும், வீதமும், 35 வயதுக்குட்பட்ட 10 இளம் கலைஞர்களுக்கு தலா 10,000 ரூபாய் வீதமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

35

8 லட்சம் ரூபாய் பரிசு

இதே எண்ணிக்கை அடிப்படையில் சிற்பக்கலை பிரிவிலும் சிறந்த 25 கலைஞர்கள் என 50 பேருக்கு 8 லட்சம் ரூபாய் மதிப்பில் பரிசுத் தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அளவிலான ஓவிய-சிற்பக்கலைக்காட்சியை 2024-25-ம் நிதியாண்டில் நடத்திடும் வகையில் இதன் முதற்கட்டமாக தமிழகத்தைச் சேர்ந்த ஓவிய, சிற்பக்கலைஞர்களிடமிருந்து ஓவியங்கள் மற்றும் சிற்பங்களின் புகைப்படங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கலை பண்பாட்டுத் துறையின் இணையதளத்தில் (www.artandculture.tn.gov.in) விண்ணப்பங்கள்  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

45

எந்த பிரிவில் போட்டி

ஓவிய மற்றும் சிற்ப கலைஞர்கள் மரபுவழி பிரிவிலோ அல்லது நவீனபாணி பிரிவிலோ என ஏதேனும் ஒரு பிரிவில் மட்டும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிபந்தனைகள்

மேலும் 2024-ம் ஆண்டு ஜனவரி1-ம் தேதிக்கு பின்னர் ஓவியம், சிற்பம் உருவாக்கம் மற்றும் படைக்கப்பட்டிருத்தல் வேண்டும் எனவும், தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் மூலமாக கலைச்செம்மல் விருது பெற்றவர்கள், கடந்த ஆண்டுகளில் இத்திட்டத்தின்கீழ் பயனடைந்தோர் விண்ணப்பிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஓவியர்கள் மற்றும் சிற்பிகளிடமிருந்து பெறப்படும் புகைப்படங்களில் இருந்து, மாநில அளவிலான ஓவிய மற்றும் சிற்ப கலைக்காட்சிக்கு தேர்வுக் குழு தேர்வு செய்யும் என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து அசல் ஓவியப் படைப்புகளும், சிற்பங்களும் கலைஞர்களிடம் இருந்து பெறப்பட்டு கலைக்காட்சியில் வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதில் சிறந்த 50 கலைப்படைப்புகள் தேர்வுக் குழுவால் பரிசுக்கு தேர்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

55

விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி

விண்ணப்பங்களை பூர்த்தி செய்து  உரிய விவரங்களுடன் படைப்புகளின் புகைப்படங்களை இயக்குநர், கலை பண்பாட்டுத் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், இரண்டாம் தளம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை-600 002என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விண்ணப்பங்களை நவம்பர் 30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் மேலும் விவரங்களுக்கு 044-28193195, 044-28192152 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது
 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு அரசு
தமிழ் செய்திகள்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
Recommended image2
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Recommended image3
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved