தொழிலாளர்களின் வங்கி கணக்கில் 5,000 ரூபாய்.! தமிழக அரசு சொன்ன குஷியான தகவல்
மழைக்காலத்தில் பாதிக்கப்படும் உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.5,000 நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் 32,611 குடும்பங்கள் பயனடைவார்கள்

தொழிலாளர்களுக்கான தமிழக அரசு திட்டம்
தமிழக அரசு தொழிலாளர்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் உழைக்கும் மக்களின் நலனில் எப்போதும் அக்கறை செலுத்தி வரும் தமிழக அரசு, இப்போது உப்பளத் தொழிலாளர்களுக்கான சிறப்பு நிவாரண உதவித் திட்டத்தை அறிவித்துள்ளது.
மழைக்காலத்தில் உப்பு உற்பத்தி பாதிக்கப்படுவதால் வேலை இழக்கும் நிலை உருவாகி வருகிறது. இதனையடுத்து பாதிக்கப்படும் உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.5,000 நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உப்பளத்தொழிலாளர்களுக்கு உதவித்தொகை
உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், மழைக்காலத்தில் வேலை இல்லாமல் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். அவர்களின் பொருளாதார சுமையை குறைக்கவே இந்த புதிய நிவாரண உதவி திட்டம் அரசு சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 32,611 உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு நேரடியாக நன்மை கிடைக்க உள்ளது.
இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.16.305 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை நேரடியாக பயனாளர்களின் கையிலேயே சென்றடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதே இந்தத் திட்டத்தின் முதன்மை அமைக்கப்பட்டுள்ளது.
5ஆயிரம் ரூபாய் நிவராண தொகை
உப்பளத் தொழிலாளர்களுக்கான இந்த மழைக்கால நிவாரண உதவி திட்டமும் அதில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது. மழைக்காலத்தில் வேலை இழப்பு காரணமாக குடும்பத்தின் அன்றாடச் செலவுகளை நடத்த சிரமப்படும் தொழிலாளர்களுக்கு ரூ.5,000 அளவில் வழங்கப்படும் இந்த நிதி, அவர்களின் வாழ்க்கையில் சிறு நிம்மதியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உதவி திட்டம் 2025 ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 20 வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.