- Home
- Tamil Nadu News
- 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்.! இதை செய்திருந்தால் மட்டுமே தேர்விற்கு அனுமதி! தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்.! இதை செய்திருந்தால் மட்டுமே தேர்விற்கு அனுமதி! தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
2025-2026 பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் அறிவியல் செய்முறைத் தேர்வுக்கு 80% வருகை கட்டாயம். செய்முறைத் தேர்வு பதிவு மற்றும் பயிற்சி வகுப்பு விவரங்களுக்கு dge.tn.gov.in இணையதளத்தைப் பார்க்கவும்.

பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்விற்கு 80% வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான செய்முறை தேர்விற்கு அனுமதிக்கப்படுவர் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: 2025-2026ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தேர்வர்களும், (முதன் முறையாக அனைத்துப் பாடங்களையும் தேர்வு எழுத இருப்பவர்கள்) ஏற்கனவே 2012க்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும் 01.09.2025 (திங்கள் கிழமை) முதல் 19.09.2025 (வெள்ளிக் கிழமை) வரை (விடுமுறை நாட்கள் நீங்கலாக) சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அலுவலகங்களை நேரில் அணுகி, பதிவுக்கட்டணமாக ரூ.125 செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவத்தினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். இது பயிற்சி வகுப்பிற்கான பதிவு மட்டுமே.
மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அலுவலகத்தில் செய்முறைத் தேர்விற்கு விண்ணப்பம் செய்ததற்கான ஒப்புகைச் சீட்டினை பெற்று பின்னர் இத்துறையால் தனித் தேர்வர்கள் கருத்தியல் தேர்வெழுத விண்ணப்பிக்க அறிவிக்கப்படும் நாட்களில் நேரடித் தனித்தேர்வர்கள் (Direct Private Candidate) செய்முறைத் தேர்வு பதிவு செய்தற்கான ஒப்புகை சீட்டுடனும், ஏற்கனவே தேர்வெழுதி அறிவியல் உட்பட மற்ற பாடங்களில் தோல்வியுற்ற தேர்வர்கள் அறிவியல் செய்முறைத் தேர்விற்கு விண்ணப்பித்த ஒப்புகை சீட்டு மற்றும் முன்பு தேர்வெழுதிய மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்கள் ஆகியவற்றினை இணைத்து சேவை மையத்திற்கு (Nodal Centre) சென்று Online-ல் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்த பின்னர் சேவை மையக்கால் வழங்கப்படும் ஒப்பகைச் சீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணை (Application Number) பயன்படுத்தியே தேர்வுக்கூட அனுமதிச்சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய இயலும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பெற்ற தனித்தேர்வர்கள் மட்டுமே செய்முறைத்தேர்விற்கு அனுமதிக்கப்படுவர்.
பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்விற்கு விண்ணப்பிப்பவர்கள் மாவட்டக் கல்வி அலுவலரால் (இடைநிலை) ஒதுக்கீடு செய்யப்படும் பள்ளிகளுக்குச் சென்று செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். பயிற்சி வகுப்புகளுக்கு 80% வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கான செய்முறை தேர்விற்கு அனுமதிக்கப்படுவர். செய்முறைப் பயிற்சி பெற்ற தேர்வர்கள் அந்தந்த மாவட்டக் கல்வி (இடைநிலை) அலுவலரை தொடர்பு கொண்டு செய்முறைத் தேர்வு நடத்தப்படும் நாட்கள் மற்றும் மைய விவரம் அறிந்து செய்முறைத் தேர்வினை தவறாமல் எழுதிட வேண்டும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அலுவலகங்கள் மற்றும் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளுமாறு தேர்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அலுவலக முகவரியை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.