MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பெண்களுக்கு எதிர்பாரா குட் நியூஸ்.! இலவசமாக வாகனம் ஓட்ட பயிற்சி- தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு

பெண்களுக்கு எதிர்பாரா குட் நியூஸ்.! இலவசமாக வாகனம் ஓட்ட பயிற்சி- தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு

தமிழக அரசு பெண்களின் கல்வி, பொருளாதார மேம்பாடு, பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.அந்த வகையில் தற்போது இலவசமாக வாகன ஓட்டுநர் பயிற்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது. 

2 Min read
Author : Ajmal Khan
Published : Jul 15 2025, 09:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழக அரசின் பெண்களுக்கான திட்டங்கள்
Image Credit : tndipr

தமிழக அரசின் பெண்களுக்கான திட்டங்கள்

தமிழக அரசு மகளிர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்களின் கல்வி, பொருளாதார மேம்பாடு, பாதுகாப்பு, மற்றும் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் திட்டங்களானது வடிவமைக்கப்பட்டுள்ளன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. 

புதுமைப் பெண் திட்டத்தினால் அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதன் மூலம் பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டமான விடியல் பயண திட்டமும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தமிழக அரசின் கல்வி உதவித்தொகை திட்டம்
Image Credit : ANI

தமிழக அரசின் கல்வி உதவித்தொகை திட்டம்

பணிபுரியும் மகளிர், உயர்கல்வி மாணவியர், மற்றும் திருநங்கையர் உள்ளிட்ட அனைத்து பெண்களும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம். மேலும் பெண்களுக்கு திருமண உதவித்திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் பட்டதாரி பெண்களுக்கு 50ஆயிரம் ரூபாய் மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. 

மற்ற பெண்களுக்கு 25ஆயிரம் ரூபாய் உதவித்தொகை மற்றும் தங்கமும் வழங்கப்படுகிறது. . இலவச தையல் இயந்திரத் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் பெண்களுக்கு இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சியும் வழங்கி வருகிறது. “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் சாலைப் போக்குவரத்து நிறுவனம் மூலம் இலவச பயிற்சியானது வழங்கப்படுகிறது.

35
பெண்களுக்கான ஓட்டுநர்
Image Credit : Getty

பெண்களுக்கான ஓட்டுநர்

இந்த திட்டத்தில் இணைய தமிழக அரசு பெண்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பெண்களுக்கான இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சியானது தமிழக அரசு சார்பில் அளிக்கப்படவுள்ளது. இந்த பயிற்சி "நான் முதல்வன் திட்டத்தின் கீழ்" தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சாலைப் போக்குவரத்து நிறுவனத்தின் (Institute of Road Transport) மூலம் இலவசமாக அளிக்கப்படவுள்ளது.

45
பயிற்சி நடைபெறவுள்ள மையங்கள்
Image Credit : TNDIPR

பயிற்சி நடைபெறவுள்ள மையங்கள்

கும்மிடிப்பூண்டி, விழுப்புரம், வேலூர், திருச்சி (Iஸிஜி), கும்பகோணம், காரைக்குடி, புதுக்கோட்டை, சேலம், தருமபுரி, பொள்ளாச்சி, ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர்.

பயிற்சி காலம்:

65 வேலை நாட்கள்.

55
பெண்களுக்கான ஓட்டுநர் பயிற்சி பெற தகுதிகள்:
Image Credit : Getty

பெண்களுக்கான ஓட்டுநர் பயிற்சி பெற தகுதிகள்:

  • குறைந்தபட்சம் தமிழில் பேசவும் புரிந்துக்கொள்ளும் திறனும் இருத்தல் வேண்டும்.
  • 20 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.
  • இலகுரக வாகன உரிமம் எடுத்து ஓர் ஆண்டு நிறைவடைந்திருக்க வேண்டும்
  • பி.எஸ்.வி. பேட்ஜ் (PSV Badge) பதியப் பெற்றிருக்க வேண்டும்
  • குறைந்தபட்சம் 155 செ.மீ. உயரமும், 40 கி.கி. எடையும் இருக்க வேண்டும். (பயிற்சிக்காக மட்டும்)
  • உடல் குறைபாடு இன்றி, அங்க அசைவில் குறைபாடின்றி, நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டிருக்காமல் இருத்தல் வேண்டும்
  • கண்ணாடி அணிந்தோ, அணியாமலோ கண்பார்வை திறன் Std -1 (6/6) இருத்தல் வேண்டும்.
  •  நிறபேதம் அறிதலில் கண்பார்வை குறைவின்றி நல்ல திறனுடனும் இருக்க வேண்டும்.
  • ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசியை எப்போதும் செயல்பாட்டில் இருக்குமாறு வைத்துக்கொள்ளவும்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு
பெண் அதிகாரம்
பெண்கள்
மகளிர் உரிமைத் தொகை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
விண்ணைத் தொடும் விலைவாசி உயர்வு... கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது! - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
Recommended image2
Now Playing
மாணவர்களின் உலக சாதனை முயற்சி மூலம் போதைப்பொருள் விழிப்புணர்வு! - அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம்
Recommended image3
Now Playing
டாஸ்மாக்கில் ₹10 விலை உயர்த்தப்படவில்லை...! - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!
Related Stories
Recommended image1
மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க சூப்பர் சான்ஸ்.! என்னென்ன தகுதிகள், ஆவணங்கள் தேவை தெரியுமா.?
Recommended image2
அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பு வந்தாச்சு! யாருக்கு எவ்வளவு?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved