- Home
- Tamil Nadu News
- சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்! இனி தாம்பரத்தில் டிராபிக் இல்லாமல் ஜாலியாக போகலாம்! இன்று முதல் அமல்!
சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்! இனி தாம்பரத்தில் டிராபிக் இல்லாமல் ஜாலியாக போகலாம்! இன்று முதல் அமல்!
தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, கனரக வாகனங்களுக்கான புதிய போக்குவரத்து மாற்றங்களை தாம்பரம் மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குறிப்பிட்ட சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல்
சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. அதேபோல் புறநகர் பகுதிகளான தாம்பரத்திலும் இதே நிலைமை தான். அதிலும் குறிப்பாக, விடுமுறை தினங்களில் குடும்பத்துடன் வெளியில் செல்ல விரும்புவர்கள் இந்த போக்குவரத்து நெரிசலை கண்டு அலறுகின்றனர். இதனை தடுக்க காவல்துறை தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
தாம்பரம் மாநகர காவல்துறை
இது தொடர்பாக தாம்பரம் மாநகர காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில்: பொதுமக்களின் பாதுகாப்பையும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதையும் கருத்தில் கொண்டு இன்று காலை 6.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை கீழ்க்கண்ட சாலைகளில் கனரக வாகனங்கள்செல்வதற்கு தாம்பரம் மாநகர காவல்துறை போக்குவரத்து மாற்றங்களை அறிவித்துள்ளன.
போக்குவரத்து மாற்றம்
ஜி.எஸ்.டி. சாலை தாம்பரம், குரோம்பேட், பல்லாவரம் - பம்மல் - குன்றத்தூர் சாலை திருநீர்மலை சாலை 200 அடி ரேடியல் ரோடு (200-ft Radial Road) தாம்பரம் வேளச்சேரி சாலை மற்றும் காந்தி ரோடு - முடிச்சூர் சாலை. இந்த தடை (Peak Hours) நேரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கனரக வாகனங்கள் தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனரக வாகனங்கள்
குன்றத்தூரிலிருந்து சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் - அனகாபுத்தூர் பைப்பாஸ் சர்வீஸ் சாலை அருகே எரிக்கரை சந்திப்பு மற்றும் திருநீர்மலை சாலை எரிக்கரை சாலை சந்திப்பில் இருந்து மதுரவாயல் பைப்பாஸ் சர்வீஸ் சாலை நோக்கி செல்லவும், ஓரகடத்திலிருந்து சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் முடிச்சூர் சாலை மற்றும வெளிச்சுற்றுச் சாலை (Outer ring road) சந்திப்பில் இருந்து வெளிச்சுற்றுச்சாலை நோக்கி செல்லவும், காஞ்சிபுரத்திலிருந்து சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் முடிச்சூர் சாலை மற்றும் வெளிச்சுற்றுச்சாலை (Outer ring road) சந்திப்பிலிருந்து வெளிச்சுற்றுச்சாலை வழியாக செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தாம்பரத்திலிருந்து சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள்
தாம்பரத்திலிருந்து சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் தாம்பரம் fly-over (Southern Side) பழைய சோதனைச்சாவடி வாயில் மற்றும் ஜி.எஸ்.டி. சாலை சந்திப்பு, தாம்பரம் flyover மேல் பகுதியிலிருந்து மேடவாக்கம் மார்க்கமாக வேளச்சேரி நோக்கி செல்லவும், மதுரவாயலிலிருந்து சென்னை நோக்கிவரும் கனரக வாகனங்கள் -மதுரவாயல் பைப்பாஸ் ஆம்புலன்ஸ் பாயிண்ட் மற்றும் ஜி.எஸ்.டி. சாலை சந்திப்பை தொடர்ந்து, இரும்புலியூர் சந்திப்பில் இருந்து பெருங்களத்தூர் நோக்கி செல்லவும், செங்கல்பட்டிலிருந்து சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கியும், வண்டலூர் வெளிச்சுற்றுச்சாலை (Outer ring Road) வழியாக படப்பை நோக்கியும், வண்டலூர் பழைய பாலம் வழியாக வாலஜாபாத் சாலை நோக்கியும் செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள்
எனவே, வாகன ஓட்டிகள் சீரான போக்குவரத்திற்காக, OMR மற்றும் ECR சாலைகளைப் பயன்படுத்தி, தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல்துறையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த அறிவிப்புக்கு ஒத்துழைக்குமாறு தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.