MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள்! அரசே இப்படி பாதியாக குறைத்து காட்டலாமா? கொதிக்கும் ராமதாஸ்!

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள்! அரசே இப்படி பாதியாக குறைத்து காட்டலாமா? கொதிக்கும் ராமதாஸ்!

ராமதாஸ் அவர்கள், ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கையை தமிழக அரசு குறைத்துக் காட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் தடை பெற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

2 Min read
Author : vinoth kumar
| Updated : Mar 22 2025, 02:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
online rummy

online rummy

மக்களைக் காக்க வேண்டிய அரசு,  சூதாட்ட நிறுவனங்களைக் காக்க முயல்வது நியாயமானது அல்ல என பாமக நிறுவனர் ராமதாஸ்பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் 2019-ஆம் ஆண்டு  முதல் 2024-ஆம் ஆண்டு வரை  ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து  47 பேர் மட்டும் தான் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. 2019-ஆம் ஆண்டில் தொடங்கி  இன்று வரை குறைந்தது 84 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் எண்ணிக்கையை கிட்டத்தட்ட பாதியாகக் குறைத்துக் காட்ட தமிழக அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது.

26
Suicide

Suicide

ஆன்லைன் சூதாட்டங்களை ஒழுங்குபடுத்த நேரக்கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டதை எதிர்த்து சிலர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த போது தமிழக அரசின் சார்பில்  தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் இந்தத் தகவலை தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.  தவறான புள்ளிவிவரங்களை வெளியிடுவதன் மூலம் ஆன்லைன் சூதாட்டத் தீமையின் அளவை குறைத்துக் காட்ட  தமிழக அரசு முயல்கிறது. மக்களைக் காக்க வேண்டிய அரசு,  சூதாட்ட நிறுவனங்களைக் காக்க முயல்வது நியாயமானது அல்ல.

இதையும் படிங்க: கொதித்துப் போயிருக்கும் அரசு ஊழியர்கள்! வரும் தேர்தலில் திமுகவை எதிர்க்கட்சியாக்கப் போவதாக சூளுரை!

36
Ramadoss

Ramadoss

ஆன்லைன் சூதாட்டங்களை ஒழுங்குபடுத்த நேரக்கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டதை எதிர்த்து சிலர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த போது தமிழக அரசின் சார்பில்  தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் இந்தத் தகவலை தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.  தவறான புள்ளிவிவரங்களை வெளியிடுவதன் மூலம் ஆன்லைன் சூதாட்டத் தீமையின் அளவை குறைத்துக் காட்ட  தமிழக அரசு முயல்கிறது. மக்களைக் காக்க வேண்டிய அரசு,  சூதாட்ட நிறுவனங்களைக் காக்க முயல்வது நியாயமானது அல்ல.

46
online rummy Suicide

online rummy Suicide

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது என்று 2021 ஆகஸ்ட் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அன்று தொடங்கி  2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ஆம் நாள்  புதிய ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் இயற்றப்படும் வரை 29 பேர் தற்கொலை செய்து கொண்டனர். அந்த சட்டத்தை ஆளுனர் திரும்பி அனுப்பியதைத் தொடர்ந்து  அதே சட்டம் 2023-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி மீண்டும் இயற்றப்பட்ட போது, ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை  47 ஆக உயர்ந்திருந்தது. அந்த சட்டத்திற்கு அதே ஆண்டின் ஏப்ரல் 10-ஆம் தேதி ஆளுனர் ஒப்புதல் அளித்த போது 50 பேர் தற்கொலை செய்து கொண்டிருந்தனர்.

இதையும் படிங்க:  திமுக ஆட்சியில் எத்தனை பேருக்கு அரசு வேலை? முதல்வர் சொன்னது பொய்யா? இல்ல அமைச்சர் சொல்வது பொய்யா?

56
chennai high court

chennai high court

திமுக ஆட்சியில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது என 2023-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு இதுவரை 24 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் இதுவரை 3 காலக் கட்டங்களில் 84 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கும் நிலையில், தவறான தகவல்களை அரசு அளிப்பதை ஏற்க முடியாது.  ஆன்லைன் சூதாட்டத்தில் தமிழக மக்கள் பணத்தை இழப்பதைத் தடுக்க  ஆன்லைன்  சூதாட்டத்திற்கு  உச்சநீதிமன்றத்தில் தடை  பெறுவது தான் ஒரே தீர்வு ஆகும்.

66
Tamilnadu Government

Tamilnadu Government

ஆனால், தீர்ப்பளிக்கப்பட்டு  ஒன்றரை ஆண்டுகள் ஆகப்போகும் நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசால் தடை பெற முடியவில்லை. ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்து பல குடும்பங்கள் வீதிக்கு வருவதைத் தடுப்பதும்,  தற்கொலை செய்து கொள்வதைத் தடுப்பதும் தான் அரசின் பணியாக இருக்க வேண்டும்.  ஆனால், அந்தக் கடமையை செய்ய தமிழக அரசு தவறி விட்டது. இந்த விவகாரத்தில் தவறான தகவல்களை தெரிவிப்பதை விடுத்து,  உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை  விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து  ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை உயர் நீதிமன்றம்
தமிழ்நாடு
இணையவழி சூதாட்டம்
தமிழ்நாடு அரசு
இராமதாஸ்
Latest Videos
Recommended Stories
Recommended image1
மக்களுக்கு துரோகம் செய்த ஸ்டாலின்! திமுக ஆட்சியை தூக்கி எறிய தயாராகிவிட்டனர்! பிரதமர் மோடி
Recommended image2
குடும்ப ஆட்சிக்கும், தமிழக மக்களுக்குமான தேர்தல்.. திமுகவை எகிறி அடித்த நயினார் நாகேந்திரன்!
Recommended image3
மலைக்கோட்டை நகரில் கெத்தாக கால்பதித்த பிரதமர் மோடி.. தமிழகத்துக்கு ரூ.5,655 கோடி 'மெகா' பரிசு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved