விவசாயிகளுக்கு விடிவுகாலம் வந்தாச்சு! ரூ.15000ஐ தூக்கி கொடுக்கும் தமிழக அரசு
தமிழக விவசாயிகளுக்கு ரூ.15000 மானியம் வழங்கும் திட்டத்தை திமுக அரசு அறிமுகம் செய்துள்ள நிலையில் இந்த திட்டம் தொடர்பாக விரிவாக தெரிந்து கொள்வோம்.

விவசாயிகளுக்கு மானியம்
Subsidy For Farmers : தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் விவசாயிகளுக்கு மானியம் கொடுக்கும் திட்டத்தை தற்போது அறிவித்துள்ளது. வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சரின் 2024-25-ஆம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையின் படி, காய்கறிகள், சிறுதானியங்கள், பழங்கள், மணமூட்டும் பொருட்கள், சுவை தாளித மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் சிறு வேளாண் வணிகர்களுக்கு ஏற்றுமதிக்கு தேவையான சான்றிதழ்கள் பெற மானியம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான ஆவணங்கள்
அந்த வகையில், 01.04.2024-க்கு பிறகு பெறப்பட்ட ஏற்றுமதி குறித்த சான்றிதழ்களான இறக்குமதி எற்றுமதி குறியீடு (IEC), டிஜிட்டல் கையொப்பம், பதிவு மற்றும் உறுப்பினர் சான்றிதழ் (RCMC), இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் சான்றிதழ் (Central FSSAI) உள்ளிட்ட சான்றிதழ்கள் மற்றும் அதற்கான இரசீது கீழ்காணும் அலுவலகத்தில் சமர்ப்பித்த பின்னர் வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம்(APEDA), வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம்(DGFT) போன்ற ஏற்றுமதி நிறுவனங்களுடன் ஆலோசனை செய்த பிறகு, அதிகபட்சமாக நபர் ஒருவருக்கு ரூ.15,000/- வரை பின்னேற்பு மானியம் வழங்கப்படும்.
தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பால், ஏற்றுமதியில் ஆர்வமுள்ள விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் சிறு வேளாண் வணிகர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைப்பு கட்டிடத்தில் செயல்பட்டுவரும் வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அலுவலகத்தினை நேரிலோ அல்லது மின்னஞ்சல் (மின்னஞ்சல் முகவரி. ddab.namakkal@gmail.com) மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட விவசாயிகள்
கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பில், மா, தென்னை, சிறுதானியங்கள், முருங்கை, மஞ்சள், சின்ன வெங்காயம் மற்றும் வெள்ளரி போன்றவற்றைப் பயிரிடும் ஆர்வமுள்ள விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், 01.04.2024 க்குப்பிறகு ஏற்றுமதி குறித்தான சான்றிதழ்களான இறக்குமதி, ஏற்றுமதி குறியீடு (IE Code), பதிவு மற்றும் உறுப்பினர் சான்றிதழ் (Registration membership Certificate, டிஜிட்டல் கையொப்பம் FSSAI மத்திய உரிமம், போன்றவற்றிற்கான ரசீது சமர்ப்பித்தால், வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT), வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி
ஆணையம் (APEDA) போன்ற ஏற்றுமதி நிறுவனங்களின் ஆலோசனையின் பேரில் அதிகபட்சம் ரூ.15000/- பின்னேற்பு மானியமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
எனவே, ஏற்றுமதியில் ஆர்வமுள்ள விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ள வேளாண் துணை இயக்குநர். வேளாண் வணிகம், கரூர் 9965588226 மற்றும் வேளாண்மை அலுவலர்கள் 8220915157, 9942286337, 9489508735 ஆகியோரைத் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களையும் ஏற்றுமதிக்கான வழிமுறைகளையும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.