MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Udhayanidhi VS TVK Vijay: முதல்வர் விஜயின் ரசிகை பலாத்காரம்.. சிக்கலில் எம்.எல்.ஏ. சரவணன்? விடாமல் எகிறும் உதயநிதி!

Udhayanidhi VS TVK Vijay: முதல்வர் விஜயின் ரசிகை பலாத்காரம்.. சிக்கலில் எம்.எல்.ஏ. சரவணன்? விடாமல் எகிறும் உதயநிதி!

TVK: ஸ்ரீவைகுண்டத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், த.வெ.க எம்.எல்.ஏ சரவணன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ. சரவணனை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 11 2026, 12:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பெண்கள் பாதுகாப்பில் அக்கறை இருக்கிறதா?
Image Credit : Asianet News

பெண்கள் பாதுகாப்பில் அக்கறை இருக்கிறதா?

குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதயநிதி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டு எக்ஸ் தளத்தில்: "உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா?" என்று தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளது ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு நடந்துள்ள அநீதி. அந்தப் பெண்ணை ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ. சரவணனுக்கு நெருக்கமான அக்கட்சி நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித்தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஆளுங்கட்சியில் யார் அந்த மேலிடம்
Image Credit : x

ஆளுங்கட்சியில் யார் அந்த மேலிடம்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று எம்.எல்.ஏ சரவணன் சமரசம் பேச முயன்றதாக பாதிக்கப்பட்டப் பெண் கூறியுள்ளார். இதேபோல், இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் கூறுகிறார். இன்னொரு அமைச்சருக்கும் இந்தப் பிரச்சினை தெரியும் என்கிறார். எல்லாம் மேலிடத்துக்கு தெரியும் என்று குற்றவாளிகள் கூறியதாகவும் சொல்லி உள்ளார். ஆளுங்கட்சியில் "யார் அந்த மேலிடம்" என்று மக்கள் கேட்கின்றனர்.

Related Articles

Related image1
Ration Card Correction: அலைச்சல் இனி இல்லை! ரேஷன் கார்டு பிரச்சனைகளுக்கு 5 நிமிடத்தில் தீர்வு.. நாள் குறித்த தமிழக அரசு!
Related image2
Power shutdown: நாளை இருளில் மூழ்கப்போகும் தமிழகம்.. எந்தெந்த பகுதிகள்.. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க!
34
பாதிக்கப்பட்ட பெண் கட்சியில் இருந்தும் நீக்கம்
Image Credit : Asianet News

பாதிக்கப்பட்ட பெண் கட்சியில் இருந்தும் நீக்கம்

'தனிமனித ஒழுக்கம்' பற்றி பாடமெடுத்துள்ள முதலமைச்சரின் ஒட்டுமொத்த #SofaModel அரசும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றுள்ளது. குற்றத்தை செய்தவர்களை பாதுகாக்க முயன்றதோடு மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்தும் நீக்கி இருக்கிறார்கள். பாலியல் வன்கொடுமை செய்திகளை கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கலங்குகிறது - பதறுகிறது என்று 2 நாட்கள் முன்பு முதலமைச்சர் பேசினார்.

44
குற்றவாளிகளுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ சரவணன்
Image Credit : ANI

குற்றவாளிகளுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ சரவணன்

ஆனால், தன் கட்சியைச் சேர்ந்த த.வெ.க. ஆட்களே பாலியல் வன்கொடுமை செய்தால், பாதிக்கப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கிறார். Reels எடுத்து Post செய்ய தான் 'சிங்கப்பெண்' பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா? இந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் என்ன பதில் வைத்திருக்கிறார்? ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
உதயநிதி ஸ்டாலின்
டிவி.கே. விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamilnadu Heavy Rain: பகலில் வெயில்! மாலையில் வெளுக்கப்போகும் கனமழை! கோவை, நீலகிரியில் ஜூன் 28 வரை கொட்டப்போகுது!
Recommended image2
DMK Vs CM Vijay: அடுத்தவங்க கதையை சொல்றீங்களே.. முதல்ல உங்க குடும்பத்த கவனிங்க CM Sir! விஜய்க்கு திமுக அதிரடி பதிலடி!
Recommended image3
Now Playing
தவெக பாஜகவின் B-டீமாக தான் அணைத்து நிலையிலும் செயல்படுகிறது ! சேகர்பாபு பேட்டி
Related Stories
Recommended image1
Ration Card Correction: அலைச்சல் இனி இல்லை! ரேஷன் கார்டு பிரச்சனைகளுக்கு 5 நிமிடத்தில் தீர்வு.. நாள் குறித்த தமிழக அரசு!
Recommended image2
Power shutdown: நாளை இருளில் மூழ்கப்போகும் தமிழகம்.. எந்தெந்த பகுதிகள்.. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved