- Home
- Tamil Nadu News
- Ration Card Correction: அலைச்சல் இனி இல்லை! ரேஷன் கார்டு பிரச்சனைகளுக்கு 5 நிமிடத்தில் தீர்வு.. நாள் குறித்த தமிழக அரசு!
Ration Card Correction: அலைச்சல் இனி இல்லை! ரேஷன் கார்டு பிரச்சனைகளுக்கு 5 நிமிடத்தில் தீர்வு.. நாள் குறித்த தமிழக அரசு!
New Ration Cards: ரேஷன் கார்டில் உள்ள நபர்களின் பெயர், முகவரி திருத்தம், நீக்கம் உள்ளிட்ட குறைபாடுகளை சரி செய்ய மாதந்தோறும் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அரசின் திட்டங்கள் பெற ரேஷன் கார்டு கட்டாயம்
ஏழை எளிய மக்களின் பயனடையும் வகையில் நாடு முழுவதும் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் மொத்தமாக 35,083 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றனர். இதன் மூலம் 7 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் அரிசி, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட மானிய விலையில் உணவு பொருட்களை வாங்கி வருகிறார்கள். அதுமட்டுமல்ல அரசின் எந்தவொரு திட்டங்களாக இருந்தாலும் சரி ரேஷன் கார்டுகள் இருந்தால் மட்டுமே பெற முடியும். குறிப்பாக மகளிர் உரிமை தொகை திட்டம், பொங்கல் பரிசு தொகுப்பு போன்றவைகள் ரேஷன் அட்டைகள் இருந்தால் மட்டுமே வாங்க முடியும்.
ரேஷன் அட்டையில் திருத்தம்
இந்நிலையில் ரேஷன் கார்டில் உள்ள நபர்களின் பெயர், முகவரி திருத்தம் உள்ளிட்ட குறைபாடுகளை சரி செய்ய முடியால் பொதுமக்கள் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு வந்தனர். இதனையடுத்து தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் நடத்தும் "பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம்" நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் அட்டையில் உடனடியாக திருத்தம் செய்யும் வகையில் சிறப்பு முகாம் நடைபெறுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரேஷன் அட்டை திருத்தம் செய்ய சிறப்பு முகாம்
இந்நிலையில் ரேஷன் கார்டில் உள்ள நபர்களின் பெயர், முகவரி திருத்தம் உள்ளிட்ட குறைபாடுகளை சரி செய்ய முடியால் பொதுமக்கள் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு வந்தனர். இதனையடுத்து தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் நடத்தும் "பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம்" நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் அட்டையில் உடனடியாக திருத்தம் செய்யும் வகையில் சிறப்பு முகாம் நடைபெறுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள்
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
முகவரி, பெயர் திருத்தம்
சேவைகள் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்களில் பெறப்படும் கடவுச்சொல் வழியாக (OTP) மேற்கொள்ளப்படும் என்பதால் குடும்ப அட்டைதாரர்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசியுடன் மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

