- Home
- Tamil Nadu News
- கொத்தாக வரும் விடுமுறை.! நெல்லை, கன்னியாகுமரிக்கு செல்ல சூப்பர் சான்ஸ்- தெற்கு ரயில்வே அசத்தல் அறிவிப்பு
கொத்தாக வரும் விடுமுறை.! நெல்லை, கன்னியாகுமரிக்கு செல்ல சூப்பர் சான்ஸ்- தெற்கு ரயில்வே அசத்தல் அறிவிப்பு
Southern Railway special trains : பள்ளி காலாண்டு தேர்வு, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி உள்ளிட்ட தொடர் விடுமுறைகளை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு செப்டம்பர் 20 ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் விடுமுறை சிறப்பு ரயில்
பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை வருகிற 27ஆம் தேதி முதல் விடப்படவுள்ளது. இதே போல அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு ஆயுத பூஜை (அக்டோபர் 1) மற்றும் விஜயதசமி, காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படுகின்றன. எனவே பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் இந்த நாட்களில் மூடப்பட்டிருக்கும். இதனையையொட்டி தீபாவளி பண்டிகையும் வரவுள்ளது.
எனவே ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், பண்டிகை காலங்களில் பயணிகள் அதிகம் இருப்பதால், கூடுதல் நெரிசலைத் குறைக்கும் வகையில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
மதுரை, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்
சென்னை சென்ட்ரல் – கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு ரயில்கள் (06151/06152)
சென்னை சென்ட்ரல் முதல் கன்னியாகுமரி (06151) வரை ரயில்கள் இயக்கப்படவுள்ளது. செப்டம்பர் 22, 29, அக்டோபர் 6, 13, 20 ஆகிய திங்கள்கிழமைகளில் இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 1.20 மணிக்கு கன்னியாகுமரியை அடையும் அந்த வகையில் மொத்தம் 5 சேவைகள் இயக்கப்படவுள்ளது.
கன்னியாகுமரி முதல் சென்னை சென்ட்ரல் (06152) வரை செப்டம்பர் 23, 30, அக்டோபர் 7, 14, 21 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் பிற்பகல் 3.35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை அடையும் வகையில் மொத்தம் 5 சேவைகள் இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு ரயிலில் 2 – ஏசி டூ டயர், 5 – ஏசி 3ஆம் வகுப்பு , 11 – ஸ்லீப்பர் கிளாஸ், 4 – சாதாரண இரண்டாம் வகுப்பு, 2 – மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லைக்கு சிறப்பு ரயில்
திருநெல்வேலி – செங்கல்பட்டு இருவார அதிவேக சிறப்பு ரயில்கள் (06154/06153)
திருநெல்வேலி முதல் செங்கல்பட்டு (06154) வரை செப்டம்பர் 26, 28 மற்றும் அக்டோபர் 3, 5, 10, 12, 17, 19, 24, 26 ஆகிய வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 4.00 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் மதியம் 1.15 மணிக்கு செங்கல்பட்டுவை அடையும் வகையில் மொத்தம் 10 ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளது. இதே போல செங்கல்பட்டு முதல் திருநெல்வேலி (06153): இதே தேதிகளில் பிற்பகல் 3.00 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் இரவு 11.55 மணிக்கு திருநெல்வேலியை அடையும் மொத்தமாக 10 ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளது.
நாளை முதல் முன் பதிவு தொடக்கம்
இந்த சிறப்பு ரயிலில் 2 – ஏசி 3ஆம் வகுப்பு பெட்டி, 1 – ஏசி சேர் காரு, 12 – சேர் காருகள், 4 – சாதாரண இரண்டாம் வகுப்பு, 2 – மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டாம் வகுப்பு இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை( 20.09.2025 )காலை 8.00 மணி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.