- Home
- Tamil Nadu News
- அடி தூள்.! பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 ஊக்கத்தொகை.! யாருக்கெல்லாம் கிடைக்கும்- விண்ணப்பிப்பது எப்படி.
அடி தூள்.! பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 ஊக்கத்தொகை.! யாருக்கெல்லாம் கிடைக்கும்- விண்ணப்பிப்பது எப்படி.
School students : தமிழக அரசு, தமிழ்மொழி இலக்கிய ஆர்வத்தை மாணவர்களிடையே ஊக்குவிக்க “மாதாந்திர உதவித்தொகை திட்டத்தை” அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை பெறுவார்கள்.

தமிழக அரசின் கல்வி திட்டங்கள்
பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் கல்வி திறனை அதிகரிக்க மற்றும் இடை நிற்றலைகுறைக்க காலை மற்றும் மதிய உணவு திட்டம் செயல்படுத்தி வருகிறது. மேலும் இலவச பேருந்து பயண அட்டை, இலவச மிதி வண்டி, பாட புத்தங்கள் உள்ளிட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மேலும் மாணவர்களின் கல்வி திறைமையை அதிகரிக்க போட்டிகளையும் நடத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தையும், தமிழ்மொழி வளர்ச்சியையும் ஒருங்கே வலியுறுத்தும் வகையில் சிறப்பான திட்டங்களை தொடர்ந்து அறிவித்து வருகிறது. அதன் ஓர் அங்கமாக, தமிழ்மொழி இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக “மாதாந்திர உதவித்தொகை திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
திட்டத்தின் நோக்கம்
தமிழ் மொழி இலக்கியம் என்பது நம் பண்பாட்டின் முதுகெலும்பு. மாணவர்கள் இளம் வயதிலேயே தமிழின் செழுமையையும், அதன் இலக்கிய ஆழத்தையும் உணர்ந்து வளர வேண்டும் என்ற கருத்தில், தமிழ்மொழி இலக்கியத் தேர்வை கட்டாயமாக்கியும், அதனை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு அரசின் சார்பில் நிதி ஊக்குவிப்பும் வழங்கப்படுகிறது.
யாருக்கு பயன்படும்?
2022–23 கல்வியாண்டு முதல், 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழ்மொழி இலக்கியத் தேர்வை வெற்றிகரமாக கடந்த மாணவர்கள், தேர்ச்சி பெற்றவுடன் மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை பெறுவார்கள். இது இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து வழங்கப்படும்.
திட்டத்தின் நன்மைகள்
11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்படுவது, கல்விச்செலவுகளுக்குப் பெரும் ஆதரவாக இருக்கும்.
குடும்ப நிதிச்சுமையை குறைத்து, மாணவர்கள் கல்வியில் முழுமையாக ஈடுபட ஊக்குவிக்கிறது.
தமிழ்மொழி இலக்கியம் பற்றிய அறிவும், ஆர்வமும் அதிகரிக்கிறது.
மாணவர்கள் மேல்நிலைப் படிப்புகளிலும், வேலை வாய்ப்புகளிலும் தமிழின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வதற்கு வழிவகுக்கும்.
அரசின் முன்னோடி முயற்சி
மாணவர்கள் மொழியையும், பண்பாட்டையும் பேணிக்காக்கும் வகையில், அவர்களுக்கு பொருளாதார ஆதரவையும் ஒரே நேரத்தில் வழங்கும் இந்தத் திட்டம், கல்வி சமூகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ்மொழியின் பெருமையை இளம் தலைமுறைக்கு எடுத்துச் செல்வதில் இது ஒரு முக்கியமான அடிக்கல்லாக கருதப்படுகிறது.