- Home
- Tamil Nadu News
- விவசாயிகளுக்கு குஷி.! உடனே 80% முன்பணம்- வெளியான வேளாண்மை துறையின் அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷி.! உடனே 80% முன்பணம்- வெளியான வேளாண்மை துறையின் அசத்தல் அறிவிப்பு
Quality legume seeds : தமிழக அரசு தரமான பயறுவகை விதைகளுக்கான சிறப்பு கொள்முதல் விலை திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம், விவசாயிகள் தங்கள் உளுந்து, பாசிப்பயறு போன்ற விதைகளை சிறப்பு விலைக்கு விற்பனை செய்து வருமானத்தை உயர்த்தலாம்.

விவசாயிகளுக்கான திட்டங்கள்
தமிழக அரசு, வேளாண்மை – உழவர் நலத்துறை மூலம், தரமான பயறுவகை விதைகளுக்கான சிறப்பு கொள்முதல் விலை திட்டத்தை அறிவித்துள்ளது. 2024–25ஆம் ஆண்டுக்கான உழவர்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக, அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.
இந்த திட்டத்தின் மூலம், உழவர்கள் தங்கள் பயிர்களை நேரடியாக விவசாய சந்தைகள் மற்றும் பயிர் கொள்முதல் மையங்கள் மூலம் விற்பனை செய்ய முடியும். விற்பனை செய்யும் போது, உழவரின் அடையாளமாக பாசன ஆதாரம் கொண்டிருக்க வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட விதைகள் விஞ்ஞானிகள் பரிந்துரைத்த தரத்திற்கேற்ப பரிசோதிக்கப்படுகின்றன.
தரமான பயறுவகை விதை- முன் பணம்
மேலும், கொள்முதல் செய்யப்படும் விதைகள் அடுத்தடுத்த பருவங்களில் விவசாயிகள் பயன்பாட்டிற்காக விநியோகிக்கப்படுகின்றன. சிறப்பு திட்டத்தின் கீழ், பாசன வசதி உடைய உழவர்கள் ஏக்கருக்கு 5 க்விண்டால் வரை, மழை சார்ந்த உழவர்கள் ஏக்கருக்கு 12.5 க்விண்டால் வரை விதைகளை விற்பனை செய்யலாம்.
விதை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட விதைகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் 80% முன்பணம் வழங்கப்படும். தேர்ச்சி விதைகளுக்கு ஆய்வு பெற்ற டான்சிடா கொள்முதல் விலையின்படி மீதமுள்ள தொகை வழங்கப்படும். சென்னை மற்றும் நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக அனைத்து மாவட்ட உழவர்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
முக்கிய விதிமுறைகள்
சிறப்பு சோயாபீன், உளுந்து, பாசிப்பயறு, அல்வா வகை தட்டைப் பயறு உள்ளிட்ட விதைகள் மட்டும் வாங்கப்படும்.
விதைகள் தரப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு மட்டுமே கொள்முதல் செய்யப்படும்.
உழவர்கள் விற்பனைக்கு செல்லும் முன், தங்களின் பாசன ஆதாரம் மற்றும் உரிய ஆவணங்கள் தயாராக வைத்திருக்க வேண்டும்.
இந்தத் திட்டம், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதோடு, அடுத்தடுத்த தலைமுறைக்கும் தரமான விதைகள் கிடைக்க உதவுகிறது. தமிழக அரசு, உழவர்களின் நலனையே முன்னிறுத்தி தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
நெல் - ஆண்டுக்கு 5 ஏக்கர் விதைப்பண்ணை
பிறபயிர்கள் - ஆண்டுக்கு 12.5 ஏக்கர் விதைப்பண்ணை.
தரமான பயறுவகை விதை- தொடர்புக்கு
மேலும் விவரங்களுக்கு:
கிராம அளவில் - உதவி அலுவலர்கள் விதை
வட்டார அளவில் - துணை வேளாண்மை அலுவலர்/வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர்
மாவட்ட அளவில் - வேளாண்மை துணை இயக்குநர்