- Home
- Tamil Nadu News
- தொடர்ந்து 2 நாள் விடுமுறை.! மாணவர்களுக்கும், ஊழியர்களுக்கும் போக்குவரத்துறை குஷியான அறிவிப்பு
தொடர்ந்து 2 நாள் விடுமுறை.! மாணவர்களுக்கும், ஊழியர்களுக்கும் போக்குவரத்துறை குஷியான அறிவிப்பு
Weekend holiday : வார இறுதி தொடர் விடுமுறை வருவதால், பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளது. சென்னை, பெங்களூரு மற்றும் பிற முக்கிய நகரங்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு இந்த கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது

வார இறுதி நாள் விடுமுறை
தினந்தோறும் இயந்திரங்களுக்கு இணையாக ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு சிறிது ஓய்வு கிடைத்தால் கொண்டாடி மகிழ்வார்கள். வீட்டில் ஓய்வு எடுப்பார்கள். அதிலும் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றால் நண்பர்களோடு விளையாட புறப்பட்டு விடுவார்கள். அந்த வகையில் வார விடுமுறையோடு கூடுதலாக விடுமுறை கிடைத்தால் வெளியூர்களுக்கு புறப்பட்டு விடுவார்கள்.
அந்த வகையில் வார இறுதி நாளான 19/09/2025 (வெள்ளிக்கிழமை) 20/09/2025 (சனிக்கிழமை) மற்றும் 21/09/2025 (ஞாயிறுக் கிழமை மகாளய அமாவாசை) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் இருந்து சிறப்பு பேருந்து
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை. வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 19/09/2025 வெள்ளிக் கிழமை அன்று 55 பேருந்துகளும் 20/09/2025 சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதே போல சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி. கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 19/09/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 355 பேருந்துகளும்,
பெங்களூர், திருப்பூர் ஈரோடு சிறப்பு பேருந்து
20/09/2025 (சனிக்கிழமை) 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.மாதாவரத்திலிருந்து 19/09/2025 மற்றும் 20/09/2025 ஆகிய நாட்களில் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை திரும்ப சிறப்பு பேருந்து
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 4,763 பயணிகளும் சனிக்கிழமை 2,058 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 5,219 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.