பொதுமக்களுக்கு குட்நியூஸ்! ஆவின் ஐஸ்கிரீம்! சூப்பர் ஆஃபர்!
ஆவின் நிறுவனம் 4500 மிலி ஐஸ்கிரீம் விலையை ரூ.500 ஆக குறைத்துள்ளது. இது சுபநிகழ்ச்சிகள் மற்றும் வணிகங்களுக்கு உதவியாக இருக்கும். பால் உற்பத்தியாளர்களுக்கு 80% வருவாய் சென்றடைகிறது.
Aavin
ஆவின் நிறுவனம், பொதுமக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பால், தயிர், வெண்ணெய், நெய், பன்னீர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்களை ஆவின் பாலகங்கள் மூலமாகவும் சில்லறை விற்பனையாளர்கள் மூலமாகவும் மக்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஆவின் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Aavin ice Cream
அதாவது ஆவின் நிறுவனம் பொதுமக்களுக்கு ஐஸ்கிரீம் வகைகள் எளிதில் கிடைக்கும் வகையில் சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் ஆவின் ஐஸ்கிரீம் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட்டு அவ்விடங்களிலிருந்து 75 வகைகளுக்கு மேற்பட்ட ஐஸ்கிரீம் வகைகள் தரமாக உற்பத்தி செய்து அதனை தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் விற்பனை நிலையங்கள் மூலம் நுகர்வோர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : ஜனவரி 31ம் தேதி வரை தான்! பொதுமக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட ஆவின்! ஆர்வமுள்ளவர்கள் முந்துங்கள்!
Aavin Ice Cream News
அதாவது ஆவின் நிறுவனம் பொதுமக்களுக்கு ஐஸ்கிரீம் வகைகள் எளிதில் கிடைக்கும் வகையில் சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் ஆவின் ஐஸ்கிரீம் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட்டு அவ்விடங்களிலிருந்து 75 வகைகளுக்கு மேற்பட்ட ஐஸ்கிரீம் வகைகள் தரமாக உற்பத்தி செய்து அதனை தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் விற்பனை நிலையங்கள் மூலம் நுகர்வோர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
party pack ice cream aavin
இந்நிலையில் கடந்த ஒரு சில மாதத்திற்கு முன்னர் இந்நிறுவனம் 4500 மிலி ஐஸ்கிரீம் வகைகளின் விற்பனை விலையை ரூ.600/- லிருந்து ரூ.500/- ஆகக் குறைத்துள்ளது. 4500 மிலி ஐஸ்கிரீம் வகைகளை பொதுமக்கள் தங்கள் இல்ல சுபநிகழ்ச்சிகளில் சுலபமாக 50-60 விருந்தாளிகளுக்குப் பகிர்ந்தளிக்கலாம். மேலும் உணவகங்கள், சமையல் கலை நிபுணர்கள் மற்றும் மில்க்ஷேக் விற்பனையில் ஈடுபடும் வணிகர்கள் ஆவின் 4500 மிலி ஐஸ்கிரீம் வகைகளை ஆவின் விற்பனை நிலையங்களிலிருந்து கொள்முதல் செய்து அதன் மூலம் தங்களது விற்பனையை அதிகளவில் பெருக்க உறுதுணையாக இருக்கும்.
இதையும் படிங்க : தமிழகத்தில் இனி மழை கிடையாது! ஆனால்! ட்விஸ்ட் வைத்த வானிலை மையம்!
Aavin Ice
இதுமட்டுமின்றி ஆவின் நிறுவனத்தின் தயாரிப்புகளை பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் கொள்முதல் செய்வதன் மூலமாக 80 சதவிகித வருவாய் பால் உற்பத்தியாளர்களுக்கு நேரடியாகச் சென்றடைகிறது. ஆவின் ஐஸ்கிரீம் வகைகளை தங்களது வணிக நிறுவனங்கள் மற்றும் இல்ல சுபநிகழ்ச்சிகளில் பயன்படுத்த தங்கள் அருகிலுள்ள ஆவின் பாலகத்தை அணுகி பயன்பெறலாம். மேலும் 9944353459 தொலைபேசி மூலமாக ஆர்டர் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.