- Home
- Tamil Nadu News
- ரேஷன் கார்டு மாற்றம் செய்ய சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் தீர்வு! பொதுமக்களுக்கு அசத்தலான அறிவிப்பு
ரேஷன் கார்டு மாற்றம் செய்ய சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் தீர்வு! பொதுமக்களுக்கு அசத்தலான அறிவிப்பு
Ration Card: தமிழகத்தில் செப்டம்பர் 13ம் தேதி ரேஷன் அட்டை திருத்த முகாம் நடைபெறும். முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட சேவைகளைப் பெறவுள்ளது.

தமிழகத்தில் ரேஷன் கார்டு பயன்கள்
நாடு முழுவதும் ஏழை எழிய மக்களுக்கு உதவிடும் வகையில் நியாய விலைக்கடைகளில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பல கோடி குடும்பங்கள் பயன் அடைந்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழகத்தில் 33,222 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
2.2 கோடி குடும்ப அட்டைகள் மூலம் சுமார் 7 கோடி மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் அரிசி, சக்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ரேஷன் கார்டிற்காக காத்திருக்கும் மக்கள்
இது மட்டுமில்லாமல் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, இயற்கை பேரிடர் காலங்களில் உதவித்தொகை போன்ற பல சலுகைகள் கிடைக்க ரேஷன் கார்டு முக்கிய தேவையாக உள்ளது. இதே போல தமிழகத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் உதவித்தொகை பெற ரேஷன் அட்டை முக்கிய அடையாள அட்டையாக உள்ளது.
எனவே ரேஷன் அட்டை பெற பல லட்சம் பேர் விண்ணப்பித்து காத்துள்ளனர். இதனையடுத்து விண்ணப்பத்தின் உண்மை தன்மை ஆராய்ந்து புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.
ரேஷன் கார்டு திருத்தம்
இந்த சூழலில் ரேஷன் அட்டையில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய உணவு பொருள் வழங்கல் அலுவலகத்திற்கு தினந்தோறும் அலைய வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு மாதமும் வாரத்தின் இரண்டாவது சனிக்கிழமை ரேஷன் அட்டை திருத்த முகாமை நடத்தி வருகிறது. அந்த வகையில் வருகிற சனிக்கிழமை (செப்டம்பர் 13) நடைபெறவுள்ளது.
அப்போது ரேஷன் கார்டில் முகவரியை மாற்றம் செய்தல், புதிய உறுப்பினர்களின் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், தொலைபேசி எண் மாற்றுதல், தொலைபேசி எண் பதிவு செய்தல், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தல், நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களைப் பதிவு செய்தல் உள்ளிட்ட சேவைகளை இந்த முகாமில் பெறலாம்.
செப்டம்பர் 13ஆம் தேதி - சிறப்பு முகாம்
இது மட்டுமில்லாமல் ரேஷன் கடைக்குச் சென்று பொருட்களை வாங்க முடியாமல் சிரமப்படும் முதியோர்கள், உடல் ஊனமுற்றோர் போன்ற நபர்களுக்கு அரசு தரப்பில் சிறப்பு அங்கீகாரச் சான்று வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற சனிக்கிழமை அனைத்து மாவட்டங்களிலும் இந்த முகாம்கள் நடைபெறவுள்ளது.
காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை மண்டல உதவி ஆணையர், வட்ட வழங்கல் அலுவலகங்களில் இந்த குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுடைய ரேஷன் கார்டுகளில் அப்டேட் செய்யுமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.