- Home
- Tamil Nadu News
- இலவசமாக அரசு பேருந்தில் பயணம்.! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை சொன்ன போக்குவரத்து துறை
இலவசமாக அரசு பேருந்தில் பயணம்.! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை சொன்ன போக்குவரத்து துறை
Tamilnadu Bus transport news தமிழக அரசு பேருந்தில் கட்டணமில்லா பயண அட்டைகளை மேலும் ஒரு மாதம் காலம் பயன்படுத்த போக்குவரத்து துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழக அரசு பேருந்து- பொதுமக்களுக்கு உதவி
தமிழக அரசின் பேருந்துகள் பொதுமக்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. அந்த வகையில் மகளிர்களுக்காக பேருந்தில் இலவச பயணமாக விடியல் பயண திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதே போ பல தரப்பிற்கும் இலவச பேருந்து பயண திட்டம் நடைமுறையில் உள்ளது.
அந்த வகையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வழங்கப்பட்டு வரும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை பயனாளிகள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து, பெற்றிட வழிவகை செய்யப்படும் என அறிவித்ததன் அடிப்படையில், இத்திட்டத்தினை செயல்படுத்தும் பொருட்டு, தமிழ்நாடு பயணியர் மற்றும் பொருள் போக்குவரத்துக் கழகம் (TNMLC) தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA) நிறுவனத்துடன் இணைந்து,
பேருந்து இலவச பயண அட்டை
மாற்றுத்திறனாளிகள், கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், அறிவுசார் திறன் குறைபாடு உள்ளவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு இணையதளம் வாயிலாக கட்டணமில்லா பயண அட்டைகளை பெறும் வசதி, முதற்கட்டமாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் 07.09.2023 அன்று முதல் அமல்படுத்தப்பட்டது.
பயனாளிகள், இத்திட்டத்தின் வாயிலாக எவ்வித சிரமுமின்றி தங்களது இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள அரசு இ-சேவை மையம் அல்லது https://www.tnesevai.tn.gov.in/என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இணையதளம் வாயிலாக பயண அட்டை
மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு உட்பட்ட பயனாளிகளுக்கு 2025-26 ஆம் நிதி ஆண்டில் இணையதளம் வாயிலாக பேருந்து பயண அட்டையை புதுப்பிக்க ஏதுவாகவும், இவ்வசதியினை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பயனாளிகளும் பயன் பெறும் வழியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் (விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர். கும்பகோணம், மதுரை மற்றும் திருநெல்வேலி) விரிவு படுத்த ஏதுவாகவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
இலவச பயண அட்டை- ஒரு மாதம் நீட்டிப்பு
இதனை செயல்படுத்த போதிய கால அவகாசம் தேவைப்படுகின்ற நிலையில் ஏற்கனவே பயனாளிகள் பயன்படுத்தி வரும் 30/09/2025 வரை செல்லத்தக்க கட்டணமில்லா பயண அட்டைகளை, 31/10/2025 வரை. மேலும் ஒரு மாத காலத்திற்க்கு நீட்டித்து அரசு பயணம் செய்யும் வகையில் அனுமதி போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் வழங்கப்பட்டுள்ளது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.