- Home
- Tamil Nadu News
- எடப்பாடிக்கு டெட் லைன் விதித்த செங்கோட்டையன்..! டீம் சேர்ந்து தூக்குவோம் என கடும் எச்சரிக்கை
எடப்பாடிக்கு டெட் லைன் விதித்த செங்கோட்டையன்..! டீம் சேர்ந்து தூக்குவோம் என கடும் எச்சரிக்கை
அதிமுகவில் முக்கிய தலைவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை செங்கோட்டையன் முன்வைத்துள்ளார். டிடிவி தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை இணைக்காவிட்டால் எடப்பாடிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்துள்ளார்.

அதிமுகவில் உட்கட்சி பூசல்
அதிமுகவில் உட்கட்சி பூசல் தொடர்ந்து வெடித்தன் விளைவாக டிடிவி தினகரன் சசிகலா ஓபிஎஸ் ஆகியோர் மொத்தமாக வெளியேற்றப்பட்டனர் அதனைத் தொடர்ந்து தனி தலைவராக உருவெடுத்தார் எடப்பாடி கே பழனிச்சாமி, எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்து வரும் எடப்பாடி தொடர்ந்து தான் தோன்றித்தனமாக செயல்படுவதாக அதிமுகவின் முக்கிய தலைவராக உள்ள செங்கோட்டையன் குமுரி வருவதாக தகவல்கள் கசிந்தன.
அதிருப்தியில் செங்கோட்டையன்
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு வரும் 5ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் தனது வீடு அமைந்துள்ள பகுதியில் பத்திரிகையாளர்களை சந்தித்து முக்கிய தகவல்களை தெரிவிக்க உள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று முன்னாள் எம்பி சத்தியபாமா மற்றும் தற்போது எம்எல்ஏ பண்ணாரி ஆகியோருடன் சேர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
பத்திரிகையாளர்கள் சந்திப்பின் ஒட்டுமொத்த நோக்கம் பிரிந்து சென்ற அல்லது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய தலைவர்களை உடனடியாக கட்சியில் சேர்க்க வேண்டும் என்பதுதான் செங்கோட்டையனின் ஒற்றை நோக்கமாக இருந்தது.
ஓபிஎஸ்- சசிகலா- டிடிவி இணைக்க வேண்டும்
ஆரம்ப முதலிலேயே சசிகலாவின் தீவிர விசுவாசியாக இருந்து வரும் செங்கோட்டையன் சில நாட்களாகவே எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார். இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் கடைசியாக அவர் சொல்ல வந்த ஒரே விஷயம் டிடிவி தினகரன் சசிகலா ஓ பன்னீர்செல்வம் ஆகிய முக்கிய தலைவர்களை உடனடியாக கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும்,
இல்லையென்றால் கட்சியின் முக்கிய தலைவர்கள் அனைவரையும் தான் ஒன்று சேர்த்து எடப்பாடிக்கு எதிரான நடவடிக்கைகள் ஈடுபடுவேன் என்பதை யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக வெளிப்படுத்தி விட்டார். தற்போது எடப்பாடி பழனிசாமி அடுத்த 10 நாட்களுக்குள் இணைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என கெடு விதித்துள்ளார்
எடப்பாடி அணியின் பதில் என்ன.?
செங்கோட்டையன் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மற்றொரு பக்கம்,கடப்பாரை வைத்து நகரத்தினாலும் நகராத எடப்பாடி பழனிச்சாமியை, செங்கோட்டையனின் ஒற்றை பிரஸ்மீட்டா அசைத்து விடப்போகிறது என சிரிக்கிறார்கள் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள்

