- Home
- Tamil Nadu News
- வாயில் வடை சுடும் விஜய்.. வெறும் பில்டப் தான்.. தவெக காணாம போகப்போகுது.. செல்லூர் ராஜூ அட்டாக்!
வாயில் வடை சுடும் விஜய்.. வெறும் பில்டப் தான்.. தவெக காணாம போகப்போகுது.. செல்லூர் ராஜூ அட்டாக்!
இப்படிதான் கமல்ஹாசன் வாரிசு அரசியலையும், ஊழலையும் எதிர்ப்பேன் என்றார். டார்ச் லைட்டில் டிவியை உடைத்தார். அவர் அரசியலிலும் உலக நாயகனாக மாறப்போகிறார் என்று கூறினார்கள். இப்போது காமெடியாக மாறி விட்டார்.

அதிமுகவை கடுமையாக விமர்சித்த விஜய்
மாமல்லபுரத்தில் நேற்று தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை கடுமையாக விமர்சித்து இருந்தார். அதாவது அதிமுகவை பாஜகவின் அடிமை என்று கூறிய விஜய், அதிமுக ஊழல் கட்சி என்றும் சரமாரியாக விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து அதிமுகவினர் விஜய்யை கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர்.
விஜய்க்கு செல்லூர் ராஜூ பதிலடி
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, 'விஜய் வாயால் வடை சுடுகிறார். தவெக காணாமல் போகப்போகுது' என காட்டமாக தெரிவித்துள்ளார்.
விஜய் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் தவெகவுக்கு ஒரு ஓட்டு இருக்கிறது என்று கூறியது குறித்து செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த அவர், ''விஜய் வாயில் வடை சுடுகிறார். விஜய் எத்தனை வீடுகளில் கணக்கெடுத்தார். எல்லாம் சும்மா அப்படியே சொல்றது தான். பில்டப் தான்.
தவெக காணாமல் போய் விடும்
கதாநாயகன் பில்டப் தானே கொடுப்பார். கரூரில் 41 பேர் உயிரிழந்த பிறகு பண்ணையார் விஜய் பண்ணை வீட்டுக்கு கூப்பிட்டு அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறார். இது என்னடா கான்செப்ட். இவங்க செய்யுறதை பார்த்து அரசியலில் இருப்பவர்களே சென்று விடுவார்கள். தவெக எல்லாம் இருக்குமுன்னு நினைக்கிறீங்களா. எனக்கென்னமோ சந்தேகம் தான்.
காமெடியாக மாறிய கமல்ஹாசன்
விஜய் படம் நடித்தபோது நிறைய பேர் தெருவுக்கு வந்துள்ளனர். அவர் முகத்தைப் பார்ப்பதற்காக கூடிய கூட்டத்தினர் கைதட்டிவிட்டு சென்றுவிடுவார்கள். இப்படிதான் கமல்ஹாசன் வாரிசு அரசியலையும், ஊழலையும் எதிர்ப்பேன் என்றார்.
டார்ச் லைட்டில் டிவியை உடைத்தார். அவர் அரசியலிலும் உலக நாயகனாக மாறப்போகிறார் என்று கூறினார்கள். இப்போது காமெடியாக மாறி விட்ட கமல்ஹாசன் அங்கு (திமுக) போய் சேர்ந்து விட்டு 15 சீட் கேட்கிறார்.
திமுக கூட்டணி பலமாக இல்லை
முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்வது போல் திமுக கூட்டணி பலமாக இல்லை. அங்கு அங்கம் வகிக்கும் காங்கிரஸ் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும். கூடுதல் சீட் வேண்டும் என தொடர்ந்து கேட்டு வருகிறது. திமுக கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்டு கட்சிகள், வைகோவின் மதிமுக கூடுதல் சீட் கேட்டு வருகின்றன. ஆனால் அதிமுக கூட்டணி மிகவும் பலமாக உள்ளது'' என்று தெரிவித்தார்.

