MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பெரியாரை ஏற்றுக்கொள்ளும் தம்பிகள் கட்சியை விட்டு போங்க.! சீமானின் அதிரடி அறிவிப்பு

பெரியாரை ஏற்றுக்கொள்ளும் தம்பிகள் கட்சியை விட்டு போங்க.! சீமானின் அதிரடி அறிவிப்பு

ஈரோடு இடைத்தேர்தல் தோல்வி குறித்துப் பேசிய சீமான், பெரியாரை விமர்சிப்பதில் தொடர்ந்து உறுதியாக இருப்பதாகவும், அவரது கொள்கைகள் கொண்டாடப்படத் தேவையில்லை என்றும் கூறினார். தொண்டை சரியில்லாமல் போனதால் பெரியார் குறித்து அதிகம் பேசவில்லை என்றும், தன்னைப் பின்பற்றுபவர்கள் பெரியாரை விரும்பினால் தன்னை விட்டு விலகலாம் என்றும் தெரிவித்தார்.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Feb 10 2025, 12:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பெரியாரை ஏற்றுக்கொள்ளும் தம்பிகள் கட்சியை விட்டு போங்க.! சீமானின் அதிரடி அறிவிப்பு

பெரியாரை ஏற்றுக்கொள்ளும் தம்பிகள் கட்சியை விட்டு போங்க.! சீமானின் அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் திமுக- அதிமுக ஆகிய கட்சிகளுக்கு போட்டியாக தேர்தலில் அதிகளவு வாக்குகளை வாங்கி வரும் கட்சி நாம் தமிழர் கட்சி, அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சுக்கு ஏராளமான இளைஞர்கள் ரசிகராக உள்ளனர். சீமானின் ஆவேச பேச்சுக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி அதிக வாக்கு சதவிகிதத்தை பெற்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்றுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சீமானுக்கு எதிராக போராட்டம்

சீமானுக்கு எதிராக போராட்டம்

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாகவே தந்தை பெரியாரை கடுமையாக விமர்சித்து சீமான் பேசி வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். சீமான் வீட்டு முற்றுகையிடும் போராட்டமும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் சீமானின் பேச்சின் ஈர்ப்பு காரணமாக கட்சியில் இணைந்த தொண்டர்கள். நிர்வாகிகள் தற்போது அடுத்தடுத்து வெளியேறி வருகிறார்கள். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் முதல் நிர்வாகிகள், தொண்டர்கள் என விலகி வருகிறார்கள்.

35
டெபாசிட் இழந்த சீமான் கட்சி

டெபாசிட் இழந்த சீமான் கட்சி

இதனால் நாம் தமிழர் கட்சியின் மற்ற நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ள நிலையில் சீமான் தற்போது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான்,  ஈரோடு இடைதேர்தலில் டெபாசிட் இழந்தது எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளே டெபாசிட் இழந்துள்ளார்கள்.

இந்த தேர்தல் முடிவுகலிலிருந்து நாம் தமிழர் கட்சியினர் ஊக்கமடைந்துள்ளனர். பா.ஜ.க வாக்குகள் நாம் தமிழர்  கட்சிக்கு வந்துள்ளது என கூறுவது தவறானது என கூறியவர், பா.ஜ.கவும் அதிமுக வும் நாம் தமிழர் கட்சி வளர வேண்டும் என எப்படி நினைப்பார்கள் என கேள்வி எழுப்பினார்.

45
பெரியார் - சீமான் சர்ச்சை கருத்து

பெரியார் - சீமான் சர்ச்சை கருத்து

பெரியார் குறித்து ஓவராக நான் பேசிவிட்டேன் என அண்ணாமலை கூறியுள்ளார். நான் இப்போது தான் தொடங்கியே இருக்கிறேன். இதுவே ஓவர் என்றால் கொஞ்சம் கஷ்டம் தான். பெரியார் ஆதரவு நிலைப்பாட்டில் தான் நான் இருந்தேன். தற்போது ஒரு தெளிவு வந்துள்ளது. பெரியாரின் கொள்கை கொண்டாடப்பட வேண்டிய கொள்கை இல்லை என தெரிந்த பின்பு எதிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். .எனக்கு தொண்டை சரியில்லாமல் போய் விட்டது இல்லையென்றால் பெரியார் குறித்து இன்னும் அதிகமாக பேசியிருப்பேன் என சீமான் கூறினார். 

55
விலகி செல்லலாம்- சீமான்

விலகி செல்லலாம்- சீமான்

மேலும் ஈழத்தில் நேதாஜி படம் இருந்தது எம்ஜிஆர் படம் இருந்தது அங்கு பெரியார் படம் இல்லை விடுதலைப்புலிகள் சாக வேண்டும் என நினைத்தது திராவிடம்.  பிரபாகரன் உள்ளிட்ட உலகமே பெரியாரை ஏற்றுக்கொண்டாலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் அவரை எதிர்ப்பேன் என உறுதியாக தெரிவித்த சீமான் பெரியார் எங்களுக்கு தேவையில்லை, எனக்கு தேவையில்லை என்னை பின்பற்றுபவர்கள் பெரியார் தான் வேண்டுமென்றால் என்னை விட்ட விலகி செல்லலாம் என கூறினார். 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
அரசியல்
சீமான்
தமிழ் செய்திகள்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image2
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Recommended image3
Now Playing
சென்னையில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் பிரம்மாண்ட போராட்டம்! தவெக அரசுக்கு எதிராக முழக்கம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved