MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • குஷியோ குஷி! மார்ச் மாதத்தில் மட்டும் பள்ளி மாணவர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை!

குஷியோ குஷி! மார்ச் மாதத்தில் மட்டும் பள்ளி மாணவர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை!

தமிழகத்தில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் தொடர் விடுமுறை கிடைத்த நிலையில் பிப்ரவரி மாதம் விடுமுறை கிடைக்காத மாதம். இந்நிலையில் மார்ச் மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை வருகிறது என்பதை பார்ப்போம்.

2 Min read
Author : vinoth kumar
| Updated : Feb 14 2025, 07:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
குஷியோ குஷி! மார்ச் மாதத்தில் மட்டும் பள்ளி மாணவர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை!

குஷியோ குஷி! மார்ச் மாதத்தில் மட்டும் பள்ளி மாணவர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை!

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே அளவில்லாத சந்தோஷம் தான். பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல இது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பொருந்தும். அதிலும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். அந்த வகையில் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் மாணவர்களுக்கு கொண்டாட்ட மாதமாகவே அமைந்தது. அந்த வகையில் டிசம்பர் மாதத்தில் ஒரு பக்கம் வடகிழக்கு பருவமழையால் விடுமுறை கிடைத்தால் மறு பக்கம் அரையாண்டு தேர்வு முடிந்து 10 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்தது. 

25
பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்கள்

இதனையடுத்து ஜனவரி 2ம் தேதி பள்ளி தொடங்கி ஒரு வாரம் தான் வகுப்புகள் நடைபெற்ற நிலையில் எந்த வருடமும் இல்லாத வகையில் பொங்கல் பண்டிகைக்கு  9 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்ததால் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். குறிப்பாக ஜனவரி 11ம் தேதி தொடங்கி ஜனவரி 19ம் தேதி வரை விடுமுறை கிடைத்தது. மொத்தமாக பார்க்க போனால் ஜனவரி மாதத்தில் பள்ளிகள் வெறும் 10 நாட்கள் மட்டுமே நடந்திருக்கும். 

35
பிப்ரவரி மாதம்

பிப்ரவரி மாதம்

அதேபோல் பிப்ரவரி மாதம் வந்துவிட்டால் விடுமுறையே கிடைக்காத மாதம் என கூறப்படும். அந்த வகையில் பிப்ரவரி 11ம் தேதி தைப்பூசம் விடுமுறை மட்டுமே வருகிறது. மற்றபடி வார விடுமுறை நாட்கள் வரும். 

இதையும் படிங்க: வேலை இருந்தா சீக்கிரமாக முடிச்சுடுங்க! தமிழகம் முழுவதும் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் லிஸ்ட் இதோ!

45
மார்ச் மாதம்

மார்ச் மாதம்

இந்நிலையில் மார்ச் மாதத்தில் எத்தனை நாட்கள் அரசு விடுமுறை, எந்தெந்த நாட்கள் வருகிறது என்பது குறித்து பள்ளி மாணவர்கள் இப்போதே காலாண்டரை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அதன்படி மார்ச் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தெலுங்கு வருட பிறப்பும், மார்ச் 31ம் தேதி திங்கள் கிழமை ரம்ஜான் பண்டிகையும் வருகிறது. மார்ச் மாதத்தில் மட்டும் 2 நாட்கள் மட்டுமே அரசு விடுமுறை வருகிறது. அதில் ஒரு அரசு விடுமுறை ஞாயிற்றுக்கிழமை வருவதால் பள்ளி மாணவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இதையும் படிங்க: இனி வெயில் உச்சம் தொடுமாம்! சென்னையில் எப்படி இருக்கும்? வார்னிங் கொடுத்த வானிலை மையம்!

55
பள்ளி மாணவர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை

பள்ளி மாணவர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை

மற்றப்படி வார விடுமுறைகள் 10 நாட்கள் வருகிறது. அரசு மற்றும் வார விடுமுறை நாட்கள் சேர்த்து மார்ச் மாதத்தில் மட்டும் 11 நாட்கள் விடுமுறை வருவதால் பள்ளி மாணவர்கள் இப்போதே குஷியில் இருந்து வருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசு ஊழியர்கள்
பள்ளி மாணவர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Recommended image2
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Recommended image3
ரூ.70,000 ஊக்கத்தொகை முதல் ஒரு லட்சம் பரிசுத் தொகை வரை.! லிஸ்ட் போட்ட தமிழக அரசு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved