- Home
- Tamil Nadu News
- இனி வெயில் உச்சம் தொடுமாம்! சென்னையில் எப்படி இருக்கும்? வார்னிங் கொடுத்த வானிலை மையம்!
இனி வெயில் உச்சம் தொடுமாம்! சென்னையில் எப்படி இருக்கும்? வார்னிங் கொடுத்த வானிலை மையம்!
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நீடிக்கும், வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இனி வெயில் உச்சம் தொடுமாம்! சென்னையில் எப்படி இருக்கும்? வார்னிங் கொடுத்த வானிலை மையம்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரத்தில் வெயிலும், இரவு நேரத்தில் கடுமையான பனி பொழிவும் நிலவுகிறது. இந்நிலையில் வரும் நாட்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வெப்பம் 3 டிகிரி வரை உயரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
heatwave in tamilnadu
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
இதையும் படிங்க: டெபாசிட் இழப்பது தானே உங்கள் தேர்தல் வியூகம்! மைக்கை நீட்டினாலே உளறும் திரள்நிதி சீமான்! அலறவிடும் தவெக!
15ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதேபோல் 16 முதல் 19 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
summer heat
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இதையும் படிங்க: நானும் எடப்பாடி பழனிசாமிக்கு இணையானவன் தான்! இபிஎஸ் மீது அவ்வளவு கோபமா? பெயரை உச்சரிக்காத செங்கோட்டைன்!
அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22°செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.