MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • School Reopening : ஜூன் 4-ல் பள்ளிகள் திறப்பு உறுதி! வெயிலின் தாக்கம் "சென்டிமீட்டரில்" குறைந்ததாகவும் அமைச்சர் பேச்சு!

School Reopening : ஜூன் 4-ல் பள்ளிகள் திறப்பு உறுதி! வெயிலின் தாக்கம் "சென்டிமீட்டரில்" குறைந்ததாகவும் அமைச்சர் பேச்சு!

School Reopening : தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைந்ததால், திட்டமிட்டபடி ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

1 Min read
Author : Arun Mozhi Varman
Published : Jun 03 2026, 11:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
திட்டமிட்டபடி ஜூன் 4 ல் பள்ளிகள் திறப்பு
Image Credit : our own

திட்டமிட்டபடி ஜூன் 4-ல் பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கோடை வெயிலின் கொடுமை தீவிரமாக இருந்ததால், ஜூன் 1-ஆம் தேதி தொடங்கவிருந்த நடப்பு கல்வி ஆண்டு, 4-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இது மேலும் தள்ளிவைக்கப்படுமா என்பது குறித்து சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஆய்வு நடத்தினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து வருவதால், திட்டமிட்டபடி வரும் ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் என்று தெளிவுபடுத்தினார். அதே வேளை, செய்தியாளர்கள் சந்திப்பில் வெப்பநிலையைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக மழையளவைக் குறிக்கும் 'சென்டிமீட்டர்' என்ற வார்த்தையை அமைச்சர் பயன்படுத்தியது இணையவெளியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
செய்தியாளர் சந்திப்பு
Image Credit : Asianet News

செய்தியாளர் சந்திப்பு

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், "வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததன் காரணமாகத்தான் ஜூன் 1-ஆம் தேதி துவங்க வேண்டிய பள்ளி திறப்பை, ஜூன் 4-ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தோம். தற்போது வெயிலின் தாக்கம் 41 சென்டிமீட்டரிலிருந்து 35 சென்டிமீட்டராகக் குறைந்துள்ளது. இந்த வெயில் தாக்கத்தால் ஒருவர் கூட தமிழகத்தில் இறக்கவில்லை. எனவே, திட்டமிட்டபடி வரும் ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறப்பதில் எந்தத் தடையும் இல்லை," என்று கூறினார்.

Related Articles

Related image1
June School Holiday: கோடை விடுமுறை முடிந்த கையோடு! பள்ளி மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை?
Related image2
பள்ளி மாணவிகளுக்கு மாதம் 3 நாள் மாதவிடாய் விடுப்பு.. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
33
அமைச்சரின் பேச்சால் குழப்பம்
Image Credit : Asianet News

அமைச்சரின் பேச்சால் குழப்பம்

பள்ளிகள் திறப்பு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட போது, வெப்பநிலையை 'டிகிரி செல்சியஸ்' என்று கூறுவதற்குப் பதிலாக, மழையின் அளவை அளவிடும் 'சென்டிமீட்டர்' என்ற வார்த்தையை அமைச்சர் அடுத்தடுத்துப் பயன்படுத்தினார். வெயிலின் அளவை சென்டிமீட்டரில் அவர் குறிப்பிட்டது அங்கிருந்த செய்தியாளர்களிடையே சற்றே வியப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.

நெட்டிசன்கள் விமர்சனம்

பள்ளிகள் திறப்பு தேதி உறுதியானதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நிம்மதியடைந்தாலும், மூத்த அமைச்சரான செங்கோட்டையன் வெப்பநிலை அளவீட்டில் காட்டிய இந்தக் குழப்பம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. "வெயிலை சென்டிமீட்டரில் அளக்க ஆரம்பிச்சிட்டாங்களா?" என அமைச்சரின் வீடியோவைப் பகிர்ந்து நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

About the Author

AM
Arun Mozhi Varman
பள்ளி
செங்கோட்டையன்
பள்ளிகள் விடுமுறை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ரூட்டை மாற்றிய அண்ணாமலை.! தமிழக அரசியலில் என்ன மாற்றம் ஏற்படும்? மலைக்க வைக்கும் திருப்பங்கள்.!
Recommended image2
Now Playing
ஜூன் மாதம் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 யாருக்கெல்லாம் கிடைக்கும்? உடனே செக் பண்ணுங்க.!
Recommended image3
Kalaignar Magalir Urimai Thogai: ஜூன் மாதம் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 யாருக்கெல்லாம் கிடைக்கும்? உடனே செக் பண்ணுங்க.!
Related Stories
Recommended image1
June School Holiday: கோடை விடுமுறை முடிந்த கையோடு! பள்ளி மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை?
Recommended image2
பள்ளி மாணவிகளுக்கு மாதம் 3 நாள் மாதவிடாய் விடுப்பு.. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved