- Home
- Tamil Nadu News
- School Education Department: தமிழகத்தில் வெப்ப அலை எச்சரிக்கை! பள்ளிகளுக்கு விடுமுறை? அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் முக்கிய உத்தரவு!
School Education Department: தமிழகத்தில் வெப்ப அலை எச்சரிக்கை! பள்ளிகளுக்கு விடுமுறை? அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் முக்கிய உத்தரவு!
School Student: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும் வேலூர், மதுரை, உள்ளிட்ட 19 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்பதால் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை முக்கிய சுற்றறிக்கை.

தமிழகத்தில் கோடை வெயில் முடிந்த பிறகும் வெயில் சுட்டெரித்து வருகிறது. பல்வேறு இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும் வேலூர், மதுரை, சேலம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை முக்கிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதாவது தமிழ்நாட்டில் நிலவும் வெப்ப அலை மற்றும் அதிக வெப்பநிலைச் சூழ்நிலைகளால் மாணவர்களின் உடல்நலன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே பள்ளி மாணவர்களின் நலனை உறுதி செய்ய பள்ளிக்கல்வித்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
* அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள், தங்களது மாவட்ட பேரிடர் வானிலை மையத்துடன் இணைந்துள்ள மையத்திடமிருந்து தங்கள் பள்ளி அமைந்துள்ள வட்டாரம்/ கிராமம் குறித்த வானிலை சார்ந்த விவரங்களை தினம் பெற்று அவர்களின் அறிவுரையின்படி செயல்பட தெரிவிக்கப்படுகிறது. மேலும், பள்ளி அமைந்துள்ள வட்டாரம்/ கிராமம் குறித்த வானிலை விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தினந்தோறும் பெறுவதற்கு ஏதுவாக வட்ட பேரிடர் மேலாண்மை மையத்துடன் ஒரு whatsapp group போன்ற செயலி மூலம் இணைப்பதற்குண்டான பணியினை முதன்மை கல்வி அலுவலர்கள் ஏற்படுத்த வேண்டும்.
* அன்றாட வானிலை முன்னறிவிப்புகள், வெப்ப அலை எச்சரிக்கைகள் மற்றும் இதர வானிலை தொடர்பான அறிவிப்புகளை தவறாது அறிந்து கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
* இந்திய வானிலை ஆய்வு மையத்தினால் கடுமையான வெப்ப அலை (Extreme Heat Wave) நிலை ஏற்படும் என முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டால் அதுகுறித்த தகவலை உடனடியாகப் பெற்று மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை முன்னிறுத்தி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
* சூழ்நிலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகள் மற்றும் நடைமுறையில் வழிகாட்டுதல்களுக்கு இணங்க உள்ள பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்தல் உள்ளிட்ட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமையாசிரியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
* மாணவர்களுக்கு போதுமான குடிநீர் வசதி, நிழலான ஓய்விட வசதி, வெளிப்புற செயல்பாடுகளைத் தவிர்த்தல் உள்ளிட்ட வெப்ப அலை தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். எனவே, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மேற்கண்ட அறிவுறுத்தல்களை உடனடியாகத் தெரிவித்து, அவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்யத் மேற்கொள்ளுமாறு தேவையான நடவடிக்கைகளை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

