- Home
- Tamil Nadu News
- School Holiday: பள்ளி மாணவர்கள் குஷியோ குஷி! ஜூலை 28, ஆகஸ்ட் 3ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
School Holiday: பள்ளி மாணவர்கள் குஷியோ குஷி! ஜூலை 28, ஆகஸ்ட் 3ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Local Holiday: அரசு பொது விடுமுறை தவிர்த்து கோவில் திருவிழாக்கள், மசூதி, தேவாலயம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டதை அடுத்து உள்ளூர் விடுமுறை அறிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் விடுமுறை என்றாலே பள்ளி கல்லூரி மாணவர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். இந்நிலையில் அரசு பொது விடுமுறை தவிர்த்து கோவில் திருவிழாக்கள், மசூதி, தேவாலயம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டதை அடுத்து உள்ளூர் விடுமுறை அறிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் ஜூலை 28ம் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் மற்றும் நகரம், அமி சங்கரநாராயணசாமி திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா எதிர்வரும் ஜூலை 28 செவ்வாய்கிழமை அன்று நடைபெற இருப்பதால் அரசாணையின்படி வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்பிற்குட்பட்டு 28.07.2026 செவ்வாய்கிழமை அன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை (Local Holiday) நாளாக அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட நாளில் அரசு தேர்வுகள் ஏதுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது. மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instrument Act 1881)ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலே குறிப்பிட்டுள்ள விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 01 சனிக்கிழமை அன்று தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை கடை ஏழு வள்ளல்களில் ஒருவராக திகழும் வாழ்வில் ஊரி மன்னரின் வீரத்தையும் கொடைத்தன்மையும் போற்றும் வகையில் ஆண்டுதோறும் அரசு சார்பில் வல்வில் ஓரிவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி திங்கள் கிழமை வல்வில் ஓரி விழா கொண்டாடப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் ஆகஸ்ட் 3ம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. இந்த விடுமுறை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 8ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

