- Home
- Tamil Nadu News
- Tamil nadu Heatwave Alert: தமிழக மக்களே உஷார்! வெப்ப அலை எச்சரிக்கை! இன்று 19 மாவட்டங்களில் சுட்டெரிக்கப் போகும் வெயில்!
Tamil nadu Heatwave Alert: தமிழக மக்களே உஷார்! வெப்ப அலை எச்சரிக்கை! இன்று 19 மாவட்டங்களில் சுட்டெரிக்கப் போகும் வெயில்!
TN Weather Update: தமிழகத்தில் தினமும் பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது. இன்று வேலூர், மதுரை, சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று 12 மாவட்டங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் கோடை வெயில் முடிவடைந்தும் வெயிலின் தாக்கம் கொஞ்சம் கூட குறையாமல் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. தினமும் பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்து வருகிறது. நேற்று 12 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி இருந்தது. அதேபோல் மதுரை விமான நிலையம்-106, மதுரை நகரம்-105, சென்னை மீனம்பாக்கம், திருத்தணியில் தலா 104, நுங்கம்பாக்கம், பாளையங்கோட்டை, சென்னை நுங்கம்பாக்கம், திருச்சி, தஞ்சை, கரூர், பரமத்தி வேலூர், நாகை, ஈரோடு 100 டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று வேலூர், மதுரை, சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வறண்ட வானிலை
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது. அதேபோல் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
மேலும் ஜூலை 18 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் வானிலை மையம் கூறியுள்ளது.
வெப்ப நிலை உயரும்
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலை எச்சரிக்கை
இன்று மற்றும் நாளை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் (Hot and Humid) இருக்கும் நிலையில் கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம்.
மேலும் இன்று திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அதேபோல் நாளை விருதுநகர், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரித்துள்ளது.
சென்னை வானிலை அப்டேட்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படக்கூடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

