- Home
- Tamil Nadu News
- MLA Arul Vignesh : கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வீட்டில் காவலர்கள் குவிப்பு... கைதாகிறாரா அருள் விக்னேஷ்?
MLA Arul Vignesh : கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வீட்டில் காவலர்கள் குவிப்பு... கைதாகிறாரா அருள் விக்னேஷ்?
TVK MLA Arul Vignesh : கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் வீட்டிற்கு வருகை தந்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சர்ச்சையில் சிக்கிய எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், கலெக்டருக்கு ஆபா*ச மெசேஜ்களை அனுப்பியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. திமுக தலைவரான கனிமொழி இந்த விவகாரத்தை முதலில் எழுப்பினார். ஆனால், தவெக எம்.எல்.ஏ, கட்சி மற்றும் அமைச்சர்கள் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தனர். இதற்கிடையே, வழக்கறிஞர் ஆர். திரிசூல் என்பவர், எம்.எல்.ஏ மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தை நாடினார். ஆனால், இந்த விவகாரத்தில் போலீஸுக்கோ, தலைமைச் செயலாளருக்கோ எழுத்துப்பூர்வமாக எந்த புகாரும் வரவில்லை என்று அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மீடியா செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாது என்றும், புகார் வந்தால் மட்டுமே தலையிட முடியும் என்றும் உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இந்த விவகாரத்தில் புகார் ஏதும் உள்ளதா என கலெக்டரிடம் விசாரித்து பதில் அளிக்கும்படி பப்ளிக் பிராசிகியூட்டருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தலைமைச் செயலாளரிடமிருந்தும் விளக்கம் பெற நீதிமன்றம் அறிவுறுத்தியது.
புகார் அளித்த கலெக்டர்
இந்த நிலையில் தவெக எம்.எல்.ஏ மீது பெண் கலெக்டர் புகார் அளித்திருப்பதாக தெரிகிறது. கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர், தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது புகார் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திங்கள்கிழமை மதியம் மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்.பி.யிடம் இதுதொடர்பாக புகார் அளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தவெக அரசுக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறியுள்ளது.
தவெக எம்.எல்.ஏ-வுக்கு நெருக்கடி? ஆட்சியர் புகார்.. சட்ட நடவடிக்கை கோரும் மாணிக்கம் தாகூர்!
நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இந்த நிலையில் நீதிபதி லட்சுமி நாராயணன் முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது காவல்துறையிடம் சரமாரி கேள்விகள் முன்வைக்கப்பட்டு உள்ளன. ஜூலை மாதம் புகார் அளித்தபோதே நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதி, யாரையும் அரசு காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது என காட்டமாக தெரிவித்ததோடு, இந்த வழக்கில் டிசம்பர் 22ந் தேதிக்குள் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணையில் இறங்கிய போலீஸ்
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும்போதே தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் வீட்டிற்கு போலீசார் விரைந்தனர். அவர் வீட்டிற்கு சென்ற காவல் உதவி ஆய்வாளர் லோகேஷ்வரன் தலைமையிலான காவலர்கள் அவரிடம் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அவர் கைது செய்யப்பட இருக்கிறாரா என்கிற கேள்வியும் எழுகிறது. இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.















