School Teacher Promotion: தீபாவளி அதுவுமா! ஆசிரியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன பள்ளிக்கல்வித்துறை!
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்களின் பட்டியலை தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீத பணியிடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், மீதமுள்ள 50 சதவீத இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான பதவி உயர்வு பட்டியலை தயாரிக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 2024ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி நிலவரப்படி பணிமாறுதல் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு தகுதி உள்ளவர்கள் பட்டியல் தயார் செய்ய வேண்டும். பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் பள்ளி துணை ஆய்வாளர் விவரங்களையும் மாவட்ட வாரியாக தயார் செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: TN Government Employees: ஒரே நேரத்தில் 3 சம்பளங்கள்! அரசு ஊழியர்களை திக்கு முக்காட வைக்கும் தமிழக அரசு!
இதன் பெயர் பட்டியல் மற்றும் கருத்துருக்களை குறிப்பிட்ட தேதிக்குள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பும்போது பின்வரும் விவரங்கள் சரிபார்க்கப்பட வேண்டும். இளங்கலை மற்றும் முதுகலையில் அந்தந்த பாடத்தில் முதன்மை பாடமும், பி.எட். படிப்பும் படித்திருக்க வேண்டும். வெளிமாநிலச் சான்று எனில் மதிப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இதையும் படிங்க: விமானத்தை மிஞ்சும் அளவுக்கு விஜய்யின் சொகுசு கார்! இவ்வளவு வசதி இருக்கா? எதற்காக வாங்கினார் தெரியுமா?
2021 ஜனவரி 1-ம் தேதிக்கு பிறகு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வை ஆண்டுக்கு தற்காலிகமாக துறந்தவர்கள் மற்றும் ஏற்கெனவே முதுகலை ஆசிரியர் பதவி உயர்வை நிரந்தரமாக துறந்தவர்களின் பெயர்கள் எக்காரணம் கொண்டும் பட்டியலில் இடம்பெறக்கூடாது. இளங்கலை பட்டத்தில் இரட்டை பட்டப்படிப்பு மற்றும் ஒரே ஆண்டில் 2 பட்டங்கள் படித்தவர்களின் பெயரையும் பட்டியலில் சேர்க்கக் கூடாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.