- Home
- Tamil Nadu News
- நாளை பள்ளி கல்லூரிக்கு விடுமுறை.. குஷியில் துள்ளிக்குதித்து ஆட்டம் போடும் மாணவர்கள்!
நாளை பள்ளி கல்லூரிக்கு விடுமுறை.. குஷியில் துள்ளிக்குதித்து ஆட்டம் போடும் மாணவர்கள்!
School College Holiday: தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 179-வது ஆராதனை விழாவை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பொருந்தும்.

குஷியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள்
தமிழகத்தில் விடுமுறை என்றாலே ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். அதுவும் பொது விடுமுறையை தவிர்த்து கோவில் திருவிழாக்கள், மசூதி, தேவாலயங்களில் மற்றும் தியாகிகளின் நினைவு தினம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை 12 நாட்கள் முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆராதனை விழா
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் அமைந்துள்ள தியாகராஜர் சுவாமிகளின் சமாதி வளாகத்தில் ஆண்டுதோறும் ஆராதனை விழா நடைபெறுகிறது. அந்த வகையில் தியாகராஜர் சுவாமிகளின் 179-வது ஆராதனை விழா கடந்த 3-ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆராதனை விழா நாளை நடைபெறுவதையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரியங்கா வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழாவினை முன்னிட்டு நாளை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்படுகிறது.
ஜனவரி 24ம் தேதி வேலை நாள்
இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக ஜனவரி 24ம் தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவித்தும் மேற்படி நாளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும் இயங்கிட அனுமதித்தும் ஆணையிடப்படுகிறது.
அரசு அலுவலகங்கள் செயல்படும்
மேற்படி உள்ளூர் விடுமுறை நாள், செலவாணி முறிச்சட்டம் 1881இன் கீழ் உட்படாது என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிளை கருவூலகங்களும் மேற்படி உள்ளூர் விடுமுறை நாளில் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

