- Home
- Tamil Nadu News
- Savukku Shankar: ஸ்பா, பார் முதல் கூலிப்படை வரை! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் மீது சவுக்கு சங்கர் பகீர் புகார்கள்!
Savukku Shankar: ஸ்பா, பார் முதல் கூலிப்படை வரை! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் மீது சவுக்கு சங்கர் பகீர் புகார்கள்!
Savukku Shankar Complaint: யூடியூபர் சவுக்கு சங்கர், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் அருண் தன்னைக் கொலை செய்ய மும்பையில் இருந்து கூலிப்படையை நியமித்ததாகக் கூறி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

சவுக்கு சங்கர் பரபரப்பு புகார்
பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர். இவர் சவுக்கு மீடியா என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சென்னை காவல் ஆணையருக்கு அருணுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். செல்வப்பெருந்தகையும் சேகர் பாபுவையும் காப்பாற்றுவதற்காக திருவேங்கடத்தையும் சேசிங் ராஜாவையும் போட்டுத் தள்ளினார் அருண் என கூறியிருந்தார். இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து சென்னை காவல் ஆணையராக இருந்த அருண் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக இருந்து வருகிறார்.
கூலிப்படை கொலை செய்ய முயற்சி
இந்நிலையயில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக உள்ள அருண், என்னைக் கொலை செய்வதற்காக மும்பையில் இருந்து கூலிப்படையை நியமித்துள்ளார். எனக்கு டெல்லியில் இருந்து உளவுத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்ததை அடுத்து, உடனடியாக நான் சென்னை காவல் ஆணையரை சந்தித்து புகார் அளித்துள்ளேன் என்று கூறினார்.
குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்திருப்பார்
அதன் பின்னர், பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனை சந்தித்து புகார் அளித்து விட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தேன். அந்தச் சந்திப்புக்குப் பிறகே கொலைத் திட்டம் கைவிடப்பட்டது. இந்தியாவில் யாருக்கும் நடக்காத கொடுமைகள் எல்லாம் எனக்கு நடந்துள்ளது. அருண் சட்டம் - ஒழுங்கு பிரிவில் தற்போது இருந்திருந்தால் என் மீது 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்திருப்பார். அருண் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருக்கத் தகுதியில்லாத நபர்.
ஸ்டார் ஹோட்டல் பார்களில்
சென்னை காவல் துறையில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர் ஐயப்பன் மற்றும் பாலியல் தொழில் தடுப்புப் பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வரும் சந்திரசேகர் ஆகியோர் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையில் அருணுடன் பணியாற்றி வருகின்றனர். இவ்விருவரும் இணைந்து ஸ்டார் ஹோட்டல் பார்களில் மாமூல் வசூலித்து வருகின்றனர். இது காவல் ஆணையருக்கும், உளவுத் துறைக்கும், முதல்வருக்கும் தெரியுமா என்பது தெரியவில்லை. தமிழக முதல்வர் விழித்துக் கொண்டு இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.
மதுக்கூடங்களிலும் மாமூல் வசூல்
இதனிடைய சவுக்கு சங்கர் அவரது எக்ஸ் தளத்தில்: லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அருணின் முகாம் உதவியாளர் ஐயப்பன். அருண் ஐபிஎஸ் பணியில் சேர்ந்த 1998 முதல் உடன் பயணிக்கிறார். அருண் சென்னை மாநகர காவல் ஆணையர் பணியில் இருந்து மாறி 2 மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும், மதுபான கூடங்கள், மசாஜ் மற்றும் ஸ்பா சென்டர்கள், ஆகியவற்றில் வார மாமூல் வசூல் செய்து, அருணுக்கு கொடுத்து வருகிறார். லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் விபசார விடுதிகளில், சூதாட்ட கிளப்புகளிலும், மதுக்கூடங்களிலும் மாமூல் வசூல் செய்யும் விசித்திரத்தை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

