MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Tamil Nadu Women Loan Scheme: பெண்களுக்கு ஜாக்பாட்! ரூ.30 லட்சம் வரை கடனை அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு! எவ்வளவு வட்டி? விண்ணப்பிப்பது எப்படி?

Tamil Nadu Women Loan Scheme: பெண்களுக்கு ஜாக்பாட்! ரூ.30 லட்சம் வரை கடனை அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு! எவ்வளவு வட்டி? விண்ணப்பிப்பது எப்படி?

Women: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் சிறுபான்மையினர், கைவினை கலைஞர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் பெற்று பயனடையலாம். இதற்கான தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

3 Min read
Author : vinoth kumar
Published : Jun 09 2026, 11:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
பெண்களுக்கான பல்வேறு திட்டங்கள்
Image Credit : AI

பெண்களுக்கான பல்வேறு திட்டங்கள்

மகளிர் உரிமைத் தொகை, கட்டணமில்லா விடியல் பயணம் திட்டம், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், திருமண நிதி உதவித் திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கான உதவி திட்டம், இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் என பல திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்க ரூ.30 லட்சம் கடன் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
பெண்களுக்கு கடன் உதவி
Image Credit : Asianet News

பெண்களுக்கு கடன் உதவி

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், விராசாத் (கைவினை கலைஞர்களுக்கான திட்டங்கள் கடன் திட்டம்) மற்றும் கல்விக்கடன் ஆகிய கடன் செயல்படுத்தப்படுகிறது.

Related Articles

Related image1
நாட்டுக்கோழி வளர்க்க மானியம்.! கை நிறைய சம்பாதிக்க பெண்களுக்கான சூப்பர் திட்டம்.. விண்ணப்பிப்பது எப்படி.?
Related image2
Free House Scheme : தமிழக அரசு தரும் இலவச வீடு! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?
36
திட்டங்களும்.. வட்டி விகிதங்களும்
Image Credit : SCH

திட்டங்களும்.. வட்டி விகிதங்களும்

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வெவ்வேறு வருமானம் சார்ந்த பயனாளிகளுக்கு கடன் மற்றும் வட்டி விகிதங்களின் மாறுபட்ட அளவுடன் கூடிய திட்டம் 1-இல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம / நகர்ப்புறங்களில் ரூ.3,00,000க்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் திட்டம் 2-இல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம / நகர்ப்புறங்களில் ரூ.8,00,000 வரை ஆண்டு வருமானம் இருக்க வேண்டும். (திட்டம் 1-இன் கீழ் நன்மைகளை பெற முடியாத நபர்கள்) திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.20,00,000மும், திட்டம் 2-இன் கீழ் ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30,00,000 கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5% பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் அதிக பட்ச கடனாக ரூ.10,00,000 கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000 ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.

46
கல்விக்கான பிரத்யேகக் கடனுதவி
Image Credit : google

கல்விக்கான பிரத்யேகக் கடனுதவி

திட்டம் 2-இன் கீழ் ஆண்களுக்கு 10% பெண்களுக்கு 8% வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000 கடன் வழங்கப்படுகிறது. மேலும் சிறுபான்மையின மாணவ மாணவியர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை / முதுகலை தொழிற்கல்வி / தொழில் நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கு அதிகப்பட்சமாக திட்டம் 1-இன் கீழ் ரூ.20,00,000 வரையில் 3% வட்டி விகிதத்திலும், திட்டம் 2-இன் கீழ் மாணவர்களுக்கு 8% மாணவியர்களுக்கு 5% வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000 வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

56
கடனுக்கான தகுதிகள்
Image Credit : Asianet News

கடனுக்கான தகுதிகள்

மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு விராசாத் கடன் (கைவினை கலைஞர் கடன் திட்டம்) கைவினை கலைஞர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் மூலப்பொருட்களான உபகரணங்கள் / கருவிகள் இயந்திரங்கள் வாங்குவதற்கு இக்கடன் வழங்கப்படுகிறது. எனவே, சிறுபான்மையின மக்கள் இத்திட்டத்தை அதிக அளவில் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இம்மாவட்டத்தில் வசிக்கும் கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் கடன் விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் / மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் / மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய அலுவலகங்களில் பெற்று அதனை பூர்த்தி செய்து வங்கி கோரும் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

66
தேவையான முக்கிய ஆவணங்கள்
Image Credit : Asianet News

தேவையான முக்கிய ஆவணங்கள்

தனிநபர் கடன் திட்டம், சுய உதவி குழுக்கடன், விராசாத் (கைவினை கலைஞர் கடன் திட்டம்) கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் போது கடன் மனுக்களுடன் சிறுபான்மையினர் மதச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ், குடும்ப அட்டை அல்லது இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, திட்ட அறிக்கை (கடன் தொகை ரூ.5,00,000க்கு மேல் இருப்பின்), கூட்டுறவு வங்கி கோரும் தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது சிறுபான்மையினர் மதச்சான்றிழ் / சாதிச் சான்றிதழ் / வருமான சான்றிதழ் / இருப்பிட சான்றிதழ் குடும்ப அட்டை / ஆதார் அட்டை, பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate), கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது அசல் (Original), மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு அரசு
பெண்கள்
பெண் அதிகாரம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijayabaskar Join DMK: யூடர்ன் அடித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! இணையபோகும் கட்சி தவெகவா? திமுகவா? வெளியான தகவல்
Recommended image2
Now Playing
Free House Scheme : தமிழக அரசு தரும் இலவச வீடு! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Recommended image3
Now Playing
அம்மா உணவகத்தின் தினசரி வருமானம் எவ்ளோ தெரியுமா?! ஆகும் செலவை சொன்னா நம்பிதான் ஆகனும்.!
Related Stories
Recommended image1
நாட்டுக்கோழி வளர்க்க மானியம்.! கை நிறைய சம்பாதிக்க பெண்களுக்கான சூப்பர் திட்டம்.. விண்ணப்பிப்பது எப்படி.?
Recommended image2
Free House Scheme : தமிழக அரசு தரும் இலவச வீடு! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved