MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Vijayabaskar Join DMK: யூடர்ன் அடித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! இணையபோகும் கட்சி தவெகவா? திமுகவா? வெளியான தகவல்

Vijayabaskar Join DMK: யூடர்ன் அடித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! இணையபோகும் கட்சி தவெகவா? திமுகவா? வெளியான தகவல்

AIADMK: சி.விஜயபாஸ்கர், சி.வி. சண்முகம் அதிமுகவிற்கு செல்லாமல் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றனர். இதனால் இவர்கள் தவெகவில் இணைய உள்ளதாகவும் இதுதொடர்பாக தனது ஆதரவாளர்கள் மற்றும் தொகுதி மக்களிடம் தொடர்ந்து ஆலோசனை ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 09 2026, 09:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி
Image Credit : Asianet News

சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக தேர்தலை எதிர்கொண்ட தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று முதல்வராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தலில் தொடர் தோல்விகளை அடுத்து சட்டமன்ற தேர்தலிலும் படுதோல்வி அடைந்தது. இதனால் எஸ்.பி.வேலுமணி, சி.வி. சண்முகம். சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்கொடித் தூக்கினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
இபிஎஸ்க்கு எதிராக சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர்
Image Credit : Asianet News

இபிஎஸ்க்கு எதிராக சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர்

குறிப்பாக நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுகவை சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் தவெக ஆட்சிக்கு ஆதரவாகவும், இபிஎஸ் தரப்பினர் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் அவர்களின் மாவட்ட செயலாளர்களின் பதவி பறிக்கப்பட்டது. தொடர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக செயல்பட்டதாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இபிஎஸ் அணியினர் சபாநாயகருக்கு கடிதம் அளித்தனர். இதனிடையே யாரும் எதிர்பாராத விதமாக அதிமுக எம்எல்ஏக்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய 4 தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். மற்றொரு புறம் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமை ஏற்றுக்கொண்டனர்.

Related Articles

Related image1
CM Vijay: வாவ்.! பாட்ஷா பட ஸ்டைலில் கெத்தாக அமர்ந்த முதல்வர் விஜய்.! மர நாற்காலி டூ அதி நவீன சொகுசு குஷன் சேர்.! இணையத்தில் வரலாகும் புகைப்படங்கள்.!
Related image2
Amma Unavagam: அம்மா உணவகத்தின் தினசரி வருமானம் எவ்ளோ தெரியுமா?! ஆகும் செலவை சொன்னா நம்பிதான் ஆகனும்.!
35
ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் விஜயபாஸ்கர்
Image Credit : Asianet News

ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் விஜயபாஸ்கர்

ஆனால் சி.விஜயபாஸ்கர், சி.வி. சண்முகம் அதிமுகவிற்கு செல்லாமல் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றனர். இதனால் இவர்கள் தவெகவில் இணைய உள்ளதாகவும், இதுதொடர்பாக தனது ஆதரவாளர்கள் மற்றும் தொகுதி மக்களிடம் தொடர்ந்து ஆலோசனை ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியானது. அவர் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரை கட்சியை சேர்க்கவும் அமைச்சர் பதவி வழங்கவும் தவெகவில் எதிர்ப்பு நிலவி வருவதாக கூறப்பட்டது. அதுமட்டுமல்ல தவெக சென்றால் உரிய மரியாதை கிடைக்காது என்றும் கொள்கை ரீதியாக செயல்பட வேறு ஒரு பாதையை தேர்வு செய்ய வேண்டும் என்று விஜயபாஸ்கர் நினைப்பதாக கூறப்படுகிறது.

45
திமுக தலைமையிடம் பேச்சுவார்த்தை
Image Credit : Asianet News

திமுக தலைமையிடம் பேச்சுவார்த்தை

இந்நிலையில் விஜயபாஸ்கர் திமுக தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதற்கு திமுக தலைமை பச்சை கொடி காட்டியதை அடுத்து அவர் தாய் கழகமான திமுகவில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அஷ்டமி, நவமி முடிந்து முடிந்து நாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சி.விஜயபாஸ்கர் அண்ணா அறிவாலயத்தில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

55
அதிர்ச்சியில் ரகுபதி
Image Credit : our own

அதிர்ச்சியில் ரகுபதி

இதனிடையே முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வருகையால் புதுக்கோட்டையில் தனது செல்வாக்கு குறைந்துவிடுமோ என்று திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ரகுபதிக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
திமுக
மு. க. ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி
டிவி.கே. விஜய்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Free House Scheme : தமிழக அரசு தரும் இலவச வீடு! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Recommended image2
Now Playing
அம்மா உணவகத்தின் தினசரி வருமானம் எவ்ளோ தெரியுமா?! ஆகும் செலவை சொன்னா நம்பிதான் ஆகனும்.!
Recommended image3
Annamalai: என் போட்டோ, பெயரை பயன்படுத்தாதீங்க.. அண்ணாமலை அதிரடி அறிவிப்பு.. என்னாச்சு?
Related Stories
Recommended image1
CM Vijay: வாவ்.! பாட்ஷா பட ஸ்டைலில் கெத்தாக அமர்ந்த முதல்வர் விஜய்.! மர நாற்காலி டூ அதி நவீன சொகுசு குஷன் சேர்.! இணையத்தில் வரலாகும் புகைப்படங்கள்.!
Recommended image2
Amma Unavagam: அம்மா உணவகத்தின் தினசரி வருமானம் எவ்ளோ தெரியுமா?! ஆகும் செலவை சொன்னா நம்பிதான் ஆகனும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved