- Home
- Tamil Nadu News
- TTV க்கு என்ன தகுதி இருக்கு? நடராஜன் தான் ஆல் இன் ஆல்..! எடப்பாடிக்கு முட்டுக் கொடுக்கும் சவுக்கு
TTV க்கு என்ன தகுதி இருக்கு? நடராஜன் தான் ஆல் இன் ஆல்..! எடப்பாடிக்கு முட்டுக் கொடுக்கும் சவுக்கு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக டிடிவி தினகரனை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் முதல்வர் வேட்பாளரை மாற்ற வேண்டும் என சொல்வதற்கு தினகரனுக்கு என்ன உரிமை உள்ளது என சவுக்கு சங்கர் கேள்வி எழுப்பி உள்ளார்.

கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரன்
தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த அனைத்து கட்சிகளும் கூட்டணியில் தொடர்வதாக பாஜக தலைவர்கள் தெரிவித்தனர். இது ஒருபுறம் இருக்க கடந்த சில மாதங்களாக சைலண்ட் மோடில் இருந்த தினகரன் திடீரென முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்பதை எங்களால் ஒருபோதும் ஏற்க முடியாது.
நயினாரை குற்றம் சாட்டிய டிடிவி தினகரன்
முதல்வர் வேட்பாளரை மாற்றினால் நாங்கள் மீண்டும் கூட்டணிக்கு வருகிறோம் என்று கூறி திடீரென கூட்டணியில் இருந்து விலகினார். மேலும் கூட்டணிக்கட்சிகளை நயிநார் நாகேந்திரன் முறையாக வழிநடத்தவில்லை. அண்ணாமலை தலைவராக இருந்த வரையில் எங்களுக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டது என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
முதல்வர் வேட்பாளரை மாற்றச் சொல்வதா..?
இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மூத்த ஊடகவியலாளர் சவுக்கு சங்கர், அதிமுக.வின் முதல்வர் வேட்பாளரை மாற்றச்சொல்லும் அதிகாரம் டிடிவி தினகரனுக்கு எப்படி வந்தது? 2021ல் அதிமுக.வின் வெற்றியை அமமுக பல இடங்களில் தட்டிப்பறிகத்தது. ஆனால் தற்போது இருக்கக்கூடிய களச்சூழல் வேறு. அப்போது தினகரனுடன் இருந்த பல முக்கிய நிர்வாகிகள் இன்று அவருடன் இல்லை. தினகரனுக்கு ஏற்கனவே பழனிச்சாமி மீது கோபம் இருந்தது. மேலும் பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று தான் அண்ணாமலை மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
கூட்டணிக்குள் காய் நகர்த்தும் அண்ணாமலை..?
தற்போதைய சூழலில் நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமி என இருவர் மீதும் வருத்தம் இருக்கிறது. அதனை டிடிவி தினகரனின் உதவியோடு வெளிப்படுத்துகிறார். அம்மாவை நாங்கள் தான் உடன் இருந்து பார்த்துக் கொண்டோம் என சொல்கின்றனர். ஆனால் அது தவறு ஜெயலலிதாவை உடன் இருந்து பார்த்துக் கொண்டவர் நடராஜன் மட்டுமே. இவர்கள் அனைவரும் அவருடன் உடன் இருந்தவர்கள் மட்டுமே. ஜெயலலிதாவுக்கு எல்லாமே சசிகலா தான் என்றாலும் கூட அவர் அரசியலில் நேரடி தலையீடு இருக்கக்கூடாது என்பதற்காகவே கட்சியில் அவருக்கு எந்தவித பொறுப்பும் இல்லாமல் தன்னுடன் வைத்திருந்தார்.
செங்கோட்டையனை ஆதரிக்கும் TTV
கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள செங்கோட்டையனை தினகரன் ஆதரிப்பதற்கு காரணம் உள்ளது. இருவரும் இணைந்து அதிகாரத்திற்கு வரும் பட்சத்தில், ஆட்சி அதிகாரம் தனக்கு வேண்டும் என்று சொன்னாலோ, தன் காலில் விழச்சொன்னால் கூட அதனை செய்யத் தயங்காதவர் செங்கோட்டையன். ஆனால் எடப்பாடி பழனிசாமி அப்படி கிடையாது. ஒரு காலத்தில் அவர் சசிகலாவின் காலில் விழுந்து பதவியைப் பெற்றிருக்கலாம். ஆனால் இன்றைய சூழல் வேறு. தன் காலில் விழுங்கள் என்று சொன்னால், நீங்கள் வேண்டுமானால் என் காலில் விழுங்கள் என்று சொல்லும் அளவிற்கு பழனிசாமி வளர்ந்துவிட்டார். அதனால் தான் அவரை பொதுச்செயலாளராகவோ, முதல்வர் வேட்பாளராகவே ஏற்பதற்கு டிடிவி தினகரன் மறுக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
எடப்பாடியை ஆதரிக்கும் சவுக்கு சங்கர்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுக ஆட்சியில் எடப்பாடியை கடுமையாக எதிர்த்து வந்த சவுக்கு சங்கர் திமுக ஆட்சி வந்த பிறகு எடப்பாடி பழனிச்சாமிக்கு முழு நேரம் ஆதரவு கொடுக்கும் வகையில் பேசி வருகிறார். சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டபோது அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களில் எடப்பாடி பழனிசாமியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது