MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஒரே மேடையில் ஸ்டாலின், இ.பி.எஸ், சீமான், திருமா: சேலத்தைக் கலக்கிய வி.ஐ.பி திருமணம்; யார் இந்த திரிவேணி?

ஒரே மேடையில் ஸ்டாலின், இ.பி.எஸ், சீமான், திருமா: சேலத்தைக் கலக்கிய வி.ஐ.பி திருமணம்; யார் இந்த திரிவேணி?

சேலத்தில் பிரம்மாண்ட அரண்மனை செட்டில் நடந்த தொழிலதிபர் வீட்டுத் திருமணம்.அரசியல் எல்லைகளைக் கடந்து ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், சீமான், திருமாவளவன், அண்ணாமலை உள்ளிட்டோர் நேரில் பங்கேற்றனர்.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Sep 21 2026, 06:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சேலத்தைக் கலக்கிய வி.ஐ.பி திருமணம்; யார் இந்த திரிவேணி?
Image Credit : x

சேலத்தைக் கலக்கிய வி.ஐ.பி திருமணம்; யார் இந்த திரிவேணி?

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே முன்னணித் தொழிலதிபர் இல்லத் திருமண வரவேற்பு விழா நேற்று மிக விமரிசையாக நடைபெற்றது. தமிழக மற்றும் இந்திய அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ள இந்த விழாவில், பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் மற்றும் முன்னணித் திரை நட்சத்திரங்கள் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் சங்கமம்!
Image Credit : salem mrg triveni

அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் சங்கமம்!

இவ்விழாவில் முன்னாள் முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின் (மனைவி துர்கா ஸ்டாலினுடன்), எடப்பாடி பழனிசாமி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பாரதிய ஜனதா கட்சியின் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர். மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தொழிலதிபர்கள் மற்றும் வி.ஐ.பி, வி.வி.ஐ.பி-க்கள் பெருமளவில் குவிந்தனர். முன்னதாக, முதல்வர் விஜய் இந்நிகழ்வில் பங்கேற்பார் எனத் தகவல் வெளியான நிலையில், அவரது வருகை கடைசி நேரத்தில் ரத்தானது.

அதேபோல் திரையுலகில் முன்னணி நடிகர்களான சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் மற்றும் லைகா நிறுவன நிர்வாகிகள் உள்ளிட்ட திரைத்துறை சார்ந்த பிரபலங்களும் நேரில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

34
யார் இந்த திரிவேணி? தொழில் சாம்ராஜ்யம்
Image Credit : x

யார் இந்த திரிவேணி? தொழில் சாம்ராஜ்யம்

சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் 'திரிவேணி எர்த்மூவர்ஸ்' நிறுவனம், சுரங்கத் துறையில் நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்நிறுவனத்தை பி. பிரபாகரன் தலைமையேற்று நடத்தி வருகிறார். 1991-ல் தொடங்கப்பட்டு (நிறுவனத் தகவலின் படி 1993-ல் ஒரு எக்ஸ்கவேட்டருடன் தொழில் பயணம் தொடங்கி), தற்போது ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய முக்கியத் தாது வளம் கொழிக்கும் மாநிலங்களில் உள்ள பெரிய சுரங்கங்களை நிர்வகிக்கும் அளவிற்குப் பிரம்மாண்ட வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட சில ஆப்பிரிக்க நாடுகளிலும் சுரங்கத் தொழிலை இந்நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது.

இக்குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பி. பிரபாகரனின் மகனுக்கும், மும்பையைச் சேர்ந்த பிரபல இரும்பு மற்றும் தாது உற்பத்தி நிறுவனமான 'லாயிட்ஸ் மெட்டல்ஸ்' அதிபரின் மகளுக்கும் இடையே இத்திருமணம் நடந்துள்ளது. இரு குடும்பங்களுக்கும் இந்திய அளவில் அரசியல் மற்றும் அதிகார மட்டத்தில் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது.

44
அரசியல் கட்சிகளுடனான தொடர்பு மற்றும் தேர்தல் நிதி
Image Credit : x

அரசியல் கட்சிகளுடனான தொடர்பு மற்றும் தேர்தல் நிதி

திரிவேணி குழுமம் கடந்த காலங்களிலும் அரசியல் தொடர்புகளால் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. ஒடிசாவின் கியோஞ்சர் பகுதியில் சுரங்கப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, பிரபாகரனுக்கு அப்போதைய ஆளும் பிஜு ஜனதா தளத்தின் மூத்த தலைவர்களின் ஆதரவு மற்றும் அரசியல் தொடர்பு இருந்ததாக பாஜக செய்தித் தொடர்பாளர் குற்றம்சாட்டியதை 2012-ல் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' வெளியிட்டிருந்தது.மேலும், தேர்தல் பத்திரங்கள் வாயிலாக இந்நிறுவனம் பாஜகவுக்கு ரூ.5 கோடியும், திமுகவுக்கு ரூ.3 கோடியும் நிதி வழங்கியிருப்பது பதிவாகியுள்ளது. அதேபோல், பிஜு ஜனதா தளத்திற்கும் நிதி அளித்துள்ளது.

இதுதவிர, அதிமுகவின் 2024-25 நிதியாண்டு நன்கொடை பதிவேட்டின்படி, ஏப்ரல் 2024-ல் முறையே ரூ.2 கோடி, ரூ.2 கோடி, ரூ.1 கோடி என மொத்தம் ரூ.5 கோடியை இந்நிறுவனம் வழங்கியுள்ளது. இதன்மூலம், குறிப்பிட்ட ஒரு கட்சியுடன் மட்டுமின்றி அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளுடனும் பரந்த சமூக மற்றும் நிதித் தொடர்புகளைக் கொண்ட நிறுவனமாக இது விளங்கி வருகிறது.

இத்திருமணத்திற்காகச் சேலம் பிருந்தாவன் மைதானத்தில் பல ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான அரண்மனை வடிவிலான செட் அமைக்கப்பட்டிருந்தது. நாட்டின் முக்கிய வி.ஐ.பி-க்கள் நேரில் வர வசதியாகப் பிரத்யேகமாக ஹெலிபேட் வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன. விழாவில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு நூற்றுக்கணக்கான உணவு வகைகள் பரிமாறப்பட்டு, திருமண விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
சேலம்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamil Nadu Schools: இனி இந்த கட்டணத்தை வாங்க கூடாது.. முதல்வர் விஜய் ஆட்சியில் மாணவர்களுக்கு நிம்மதி
Recommended image2
School Holiday: மாணவர்களுக்கு இன்று ஜாலி நியூஸ்! கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Recommended image3
Diwali Bonus 2026: அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு எவ்வளவு போனஸ்? யாருக்கெல்லாம் கிடைத்தது?
Related Stories
Recommended image1
Milk Price Hike: பால் விலை அதிரடி உயர்வு.! தயிர் விலையும் உச்சம்.! லிட்டருக்கு எவ்ளோ தெரியுமா?
Recommended image2
விஜய் பாணியில் அடுத்த முதல்வராகிறாரா திருமாவளவன்? இணையத்தை அதிரவைக்கும் TN 07 CM 2031 டெஸ்லா கார்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved