எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் பள்ளி மாணவர்கள்!
அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், மாநில மதிப்பீட்டு புலம் திறனாய்வு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. டிசம்பர் 14ல் நடைபெற இருந்த தேர்வு மழையால் ஒத்திவைக்கப்பட்டு, தற்போது பிப்ரவரி 1ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Government School Student
அரசு பள்ளி மாணவ - மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் மாநில மதிப்பீட்டு புலம் என்ற பெயரில் திறனாய்வு தேர்வுகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதம் ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த கல்வி உதவி தொகை அனைத்து மாவட்ட மாணவர்களுக்கும் கிடைக்காது.
School Student
சென்னையை தவிர பிற மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. இந்த தேர்வு மூலம் மாணவ, மாணவிகளின் கற்றல் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். இந்த திறனாய்வு தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்திருந்தது.
இதையும் படிங்க: மது பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! 7 வகை கேன்சர்! 200 வகையான நோய் தாக்கும் அபாயம்! வெளியான பகீர்!
Aptitude test
இந்த தேர்வுகள் 2024-25ம் கல்வியாண்டில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் வரும் டிசம்பர் 14ம் தேதி ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்திறனாய்வு தேர்வுக்கு சில தகுதிகள் மற்றும் வரையறை செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளில் (அதாவது கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து மற்றும் டவுன்ஷிப்), அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2024-25 கல்வியாண்டில் 9ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர் இத்திறனாய்வுத் தேர்வு எழுதுவதற்கு தகுதி உடையவர்கள்.
Exam Postponed
இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அதற்கான வருவாய் துறையினரிடமிருந்து பெறப்பட்ட வருமான சான்று பெற்று அளித்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 8-ம் வகுப்பு இறுதி ஆண்டு தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கனமழை காரணமாக கடந்த டிசம்பர் 14ம் தேதி நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! இந்த ஒருநாள் லீவு எடுத்தால்! மொத்தம் 9 நாட்கள் விடுமுறை!
Government School
இந்நிலையில் தேர்வு தேதி மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு பிப்ரவரி 1ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.