அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! இந்த ஒருநாள் லீவு எடுத்தால்! மொத்தம் 9 நாட்கள் விடுமுறை!
தமிழக அரசு பொங்கலுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவித்த நிலையில், அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 17ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு நாள் விடுமுறை எடுத்தால் 9 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.
Pongal festival
தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக தலைநகரை விட கிராமப்புற பகுதிகளில் சொந்த பந்தங்களுடன் பொங்கல் வைத்து வெகு விமர்சியாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
Government Employee
அதாவது ஜனவரி 14 தை பொங்கல், ஜனவரி 15 திருவள்ளுவர் தினம், ஜனவரி 16 உழவர் திருநாள் வருகிறது. இடையில் ஜனவரி 17ம் தேதி வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கும் பட்சத்தில் மறுநாள் சனி, ஞாயிறு வார விடுமுறை வந்துவிடும்.
இதையும் படிங்க: ஜனவரி 17-ம் தேதி அரசு விடுமுறை! பொங்கல் பண்டிகைக்கு மொத்தம் 6 நாட்கள் லீவு! குஷியில் பள்ளி மாணவர்கள்!
Pongal Holiday
ஆகையால் சொந்த ஊர் செல்பவர்கள் ஜனவரி 17ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: பொதுமக்களுக்கு குட்நியூஸ்! ஆவின் ஐஸ்கிரீம்! சூப்பர் ஆஃபர்!
Pongal Holiday 2025
இதனையடுத்து அவர்களின் கோரிக்கையை ஏற்று ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், 17ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் இனி மழை கிடையாது! ஆனால்! ட்விஸ்ட் வைத்த வானிலை மையம்!
Tamilnadu Government Employee
இந்நிலையில் அரசு ஊழியர்கள் ஒரு நாள் லீவு எடுத்தால் 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும். அது எப்படி என்பதை பார்ப்போம். அதாவது ஏற்கனவே மொத்தம் 6 நாட்கள் விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இடையில் திங்கள் கிழமை அதாவது ஜனவரி 13ம் தேதி ஒரு நாள் விடுமுறை எடுத்துக்கொண்டால் அதற்கு முந்தைய நாள் சனி, ஞாயிறு வார விடுமுறை வந்து விடுகிறது. இதனால் மொத்தம் 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர் விடுமுறை வருவதால் அரசு ஊழியர்கள் குஷியில் இருந்தாலும் அரசு இயந்திரம் முடங்கும் அபாயம் சூழல் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: மது பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! 7 வகை கேன்சர்! 200 வகையான நோய் தாக்கும் அபாயம்! வெளியான பகீர்!