தமிழக அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! இவர்களுக்கு ரூ.1000 உயர்வு!
தமிழக அரசு சத்துணவு அமைப்பாளர்களுக்கு வழங்கப்படும் பொறுப்புப்படியை ரூ.600ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தியுள்ளது. ஒரு வாரத்திற்கு மேல் கூடுதல் பணிபுரிந்தால் மட்டுமே கூடுதல் பொறுப்புப்படி வழங்கப்படும்.
Tamilnadu Government
சத்துணவு அமைப்பாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் பொறுப்பு படி உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் எவ்வளவு படி உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின்கீழ் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஒரு நாளுக்கு ரூ.20 வீதம், மாதத்திற்கு ரூ.600 ஆக வழங்கப்பட்டு வரும் கூடுதல் பொறுப்புப் படியினை. ஒரு நாளுக்கு ரூ.33 வீதம் ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது.
Nutrition organizer
ஒரு சத்துணவு அமைப்பாளர் ஒன்றுக்கு மேற்பட்ட சத்துணவு மையங்களை கூடுதலாக கவனித்து வந்தாலும், ஒரு மையத்திற்கு உண்டான கூடுதல் பொறுப்புப்படி மட்டுமே வழங்கப்படும். ஒரு வாரத்திற்கு மேல் கூடுதல் பணிபுரிந்தால் மட்டும் கூடுதல் பொறுப்புப்படி வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து, பொறுப்பேற்ற நாளிலிருந்து முடியும் நாள் வரை உள்ள காலத்திற்கு தற்செயல் விடுப்பு நாட்களைத் தவிர, ஏனைய கூடுதல் பொறுப்பேற்ற நாட்களுக்கு (விடுமுறை நாட்கள் உட்பட) பொறுப்புப்படி வழங்கப்படும்.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! அடுத்த 12 நாட்கள் லீவே இல்லை! தொடர்ந்து ஸ்கூல் தான்!
Tamilnadu
ஒரு வாரத்திற்குமேல் பணிபுரிந்து இருந்தால் (ஒரு மாதம் முழுவதும் பணிபுரியாமல்) பணியாற்றிய நாளுக்கு (1000+30 = 33.33 (Round off Rs.33) ரூ.33 வீதம் கணக்கிட்டு வழங்கப்படும். ஒரு மாதம் முழுவதுமாக கூடுதல் பணிபுரிந்து இருந்தால், கூடுதல் பொறுப்புப்படியாக ரூ.1.000 வழங்கப்படும்.
Allowance Hike
உயர்த்தப்படும் கூடுதல் பொறுப்புப்படி, இவ்வாணை வெளியிடப்படும் நாள் முதல் நடைமுறைக்கு வருகிறது. மேலும், எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் பொறுப்புப்படியினை ரூ.1000 உயர்த்தி வழங்குவதால் ஆண்டிற்கு தோராயமாக அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவினம் ரூ.6,68,11,200 ஒப்பளிப்பு வழங்கப்படுகிறது.