- Home
- Tamil Nadu News
- ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி ரவுடி நாகேந்திரன் மரணத்தில் திடீர் திருப்பம்! அவரது மனைவிக்கு ஷாக் கொடுத்த ஐகோர்ட்!
ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி ரவுடி நாகேந்திரன் மரணத்தில் திடீர் திருப்பம்! அவரது மனைவிக்கு ஷாக் கொடுத்த ஐகோர்ட்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி நாகேந்திரன், சிறையில் இருந்தபோது உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது மனைவி நீதிமன்றத்தில் முறையீடு.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை
பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழக மாநிலத்தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் சிறையில் இருந்து பக்காவாக ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அசுவத்தாமன், பொன்னை பாலு மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஏ1 குற்றவாளி ரவுடி நாகேந்திரன்
இந்த கொலையில் மூளையாக செயல்பட்ட ஏ1 குற்றவாளியாக ரவுடி நாகேந்திரனும், ஏ2 குற்றவாளியாக அசுவத்தாமன், பொன்னை பாலு ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு சமீபத்தில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் மாற்றி உத்தரவிட்டது. இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகேந்திரனுக்கு கல்லீரல் பாதிப்பை அடுத்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாகேந்திரன் மரணத்தில் சந்தேகம்
இந்நிலையில் நாகேந்திரன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது பிரேத பரிசோதனையை தங்கள் தரப்பு மருத்துவர் மூலம் செய்ய வேண்டும் என்று அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். நீதிபதி என். சதீஸ்குமார் முன்பு ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி நாகேந்திரன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது பிரேத பரிசோதனையை தங்கள் தரப்பு மருத்துவர் மூலம் செய்ய வேண்டும் அவரது மனைவியின் அவசர முறையீட்டை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
உயர்நீதிமன்றத்தில் முறையீடு
பிரேதப் பரிசோதனைக்கென நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மேற்கொள்வார்கள் என நீதிபதி சதீஷ் குமார் பதில் அளித்துள்ளார். எனினும் நீதிபதி, இதனை மனுவாக தாக்கல் செய்தால் வழக்கு இன்று விசாரிக்கப்படும் என அறிவுறுத்தினார்.