- Home
- Tamil Nadu News
- மீண்டும் லாக்டவுனா.? கொரோனா பரவலால் அச்சத்தில் மக்கள்- பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு
மீண்டும் லாக்டவுனா.? கொரோனா பரவலால் அச்சத்தில் மக்கள்- பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு
சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா பரவல், இந்தியாவிலும் 257 பேரை பாதித்துள்ளது. தமிழ்நாட்டில் 66 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு முதல் உலகமே பாதிக்கப்பட்டது. பல நாடுகளில் கொத்து கொத்தாக உயரிழப்பு ஏற்பட்டது. பல கோடி மக்கள் கொரோனா நோயினால் பாதிப்படைந்தனர். இதனை கட்டுப்படுத்தும் வகையில் பல கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஊரடங்கு உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அடுத்ததாக தடுப்பூசி செலுத்தியதன் மூலம் கொரோனா குறைந்தது. இந்த நிலையில் மீண்டும் மக்களை அச்சுறுத்தும் வகையில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்தியாவில் 257 பேருக்கு பாதிப்பு
சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒரு சில நாடுகளில் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் 257 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 95 பேருக்கும், தமிழ்நாட்டில் 66 பேருக்கும், மகாராஷ்டிராவில் 56 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் புதிய வடிவமான ஒமைக்ரான் JN.1 என்ற வைரசின் இரண்டு திரிபுகள் தற்போது பரவி வருவது கண்டறியப்பட்டது.
தீவிர அறிகுறிகளும் காணப்படவில்லை
எனவே இந்த கோரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் செலுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இந்த நிலையில் தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடப்பாண்டில் கொரோனா பரவல் மிகக் குறைந்த அளவே காணப்படுகிறது. அதிலும், பாதிக்கப்பட்ட நபா்களுக்கு எவ்வித தீவிர அறிகுறிகளும் காணப்படவில்லை.
முக்கவசம் அணிய அறிவுறுத்தல்
வீரியம் இழந்த ஒமைக்ரான் வகை ஜெ.என்.1, எக்இசி ஆகிய தொற்றுகளே காணப்படுவதாகவும், புதிதாக உருமாறிய தீநுண்மி பரவவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் இந்நோயின் தாக்கம் மற்றும் இறப்பின் விகிதம் மிகவும் குறைந்தே காணப்படுவதை இதன் மூலம் உணர முடிகிறது.
இருந்தபோதிலும், பொதுமக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதுடன், சரியான தொற்று தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அறிகுறிகள் உள்ளவா்கள் அருகிலுள்ள மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.