- Home
- Tamil Nadu News
- அரசு ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு.! இனி இப்படி செய்யவே முடியாது- வெளியான அரசாணை
அரசு ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு.! இனி இப்படி செய்யவே முடியாது- வெளியான அரசாணை
அரசு ஊழியர்கள் புத்தகம் வெளியிடுவது தொடர்பாக நடத்தை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அரசுக்கு எதிரான விமர்சனமோ, சட்டம் ஒழுங்கு பாதிக்கும் உள்ளடக்கமோ இருக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

New rules for government employees writing books! TN government's Order : அரசின் திட்டங்கள் மக்களுக்கு கொண்டு சேர்வதற்கு அரசு ஊழியர்களின் பங்கு முக்கியமானது. எனவே அரசுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக இருப்பது அரசு ஊழியர்கள். எனவே அரசு ஊழியர்கள் எந்த கட்சிக்கும் ஆதரவாக இல்லாமல் அரசின் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என வழிமுறைகள் உள்ளது.
இருந்த போதும் அரசு ஊழியர்கள் ஒரு சில கட்சிகளில் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வரும் நிலையில், அரசுக்கு எதிரான கருத்துகளை கூறும் வகையில் பேசுவது, புத்தகங்களை வெளியிடுவது, கட்டுரையை வெளியிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
Govt employees book
அரசு ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகள்
அந்த வகையில் அரசு ஊழியர்களின் இது போன்ற செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளில் திருத்தம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அரசு ஊழியர்கள் புத்தகம் எழுதுவது, வெளியீடு தொடர்பாக நடத்தை விதிகள் திருத்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள், 1973ல் எந்த வொரு புத்தகத்தையும் வெளியிடுவதற்கு அல்லது எந்தவொரு இலக்கிய அல்லது கலைப் படைப்பிலும் தன்னை வழக்கமாக ஈடுபடுத்திக் கொள்ள ஒவ்வொரு அரசு ஊழியரும் முன் அனுமதி பெற வேண்டும் என விதி உள்ளது.
Book publishing rules
அரசுக்கு எதிராக கட்டுரைகள்
மேலும் இலக்கியம், சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை மற்றும் கவிதை பற்றிய புத்தகங்களை எழுதும் அரசு ஊழியர் இதற்காக புத்தக வெளியீட்டாளரிடமிருந்து ஊதியம் அல்லது வெகுமதி பெறும்போது உடனடியாக அரசால் பரிந்துரைக்கப்பட்ட அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் என்ற விதி உள்ளது.
இந்த நிலையில் இந்த விதியில் தற்போது புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி, அரசு ஊழியர்கள் எழுதும் புத்தகத்தில் அரசுக்கு எதிரான எந்த விமர்சனமோ அல்லது தாக்குதலோ செய்யப்படவில்லை என உறுதி அளிக்க வேண்டும்.
Government criticism
ராயல்டு பெறுவதற்கும் கட்டுப்பாடுகள்
மேலும் புத்தகத்தில் மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதிக்கும் எந்தவொரு ஆட்சேபனைக்குரிய உரை மற்றும் உள்ளடக்கமும் இல்லை என்றும் ஒரு அறிவிப்பைச் சமர்ப்பிக்க வேண்டும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புத்தக வெளியீட்டாளரிடமிருந்து ஊதியம் அல்லது ராயல்டி பெறுவதற்கு அரசு அறிவுறுத்தியதின் படி அரசு அதிகாரியிடமிருந்து அனுமதி பெற வேண்டும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.