MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • போக்குவரத்து கழகத்தில் 3724 காலிப்பணியிடம்.! 10 ஆம் வகுப்பு படித்தாலே போதும்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு

போக்குவரத்து கழகத்தில் 3724 காலிப்பணியிடம்.! 10 ஆம் வகுப்பு படித்தாலே போதும்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு

தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் 3,274 ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் ஏப்ரல் 21 வரை arasubus.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Mar 20 2025, 10:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

Tamil Nadu Transport Department Recruitment  : ஆண்டு தோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் கல்வியை முடித்து வேலை தேடி வெளி உலகத்திற்கு வருகிறார்கள். அவர்களுக்கு உதவிடும் வகையில் தனியார் துறை மூலம் வேலைவாய்ப்புக்களை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் அரசு பணியை குறிக்கோளாக வைத்து இரவு பகலாக இளைஞர்கள் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள்.

25
அரசு பணிக்கு இளைஞர்கள் தயாரா.?

அரசு பணிக்கு இளைஞர்கள் தயாரா.?

இதற்காக தமிழக அரசு சார்பாக இலவச பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு தேர்வுகளை நடத்தி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த நிலையில் இந்தாண்டு குரூப் 1, 2 மற்றும் 2ஏ, குரூப் 4 உட்பட மொத்தம் 7 போட்டித் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில்  3,274 ஓட்டுநர், நடத்துனர் பணியிடம் நிரப்பப்பட இருப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.  இதன்படி தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில்  காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.  

35
போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு

போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு

இந்த பணியிடங்களுக்கு விரும்புபவர்களுக்கு நாளை முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 8 போக்குவரத்து மண்டலங்கலுக்கு உட்பட்ட 25 பகுதிகளில்  காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச தகுதியாக பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும், எழுத்து தேர்வு, செய்முறை மற்றும் நேரடி நேர்காணல் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

45
காலியான பணியிடங்கள்

காலியான பணியிடங்கள்

அதிகபட்சமாக கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் நடத்துனர் காலியிடங்களும், சேலம் மண்டலத்தில் 486 ஓட்டுநர் நடத்துனர் காலிப்பணியிடங்களும் 
சென்னையில் 364ஓட்டுநர் நடத்துனர் பணியிடங்களும், திருநெல்வேலி மண்டலத்தில் 362 ஓட்டுநர் நடத்துனர் காலி பணியிடங்களும், கோவை மண்டலத்தில் 344 ஓட்டுநர் நடத்துனர் காலி பணியிடங்களும் மதுரை மண்டலத்தில் 322 ஓட்டுநர் நடத்துனர் காலி பணியிடங்களும், 
 

55
விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு

விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு

விழுப்புரம் மண்டலத்தில் 322 ஓட்டுநர் நடத்துனர் காலி பணியிடங்களும் நிரப்பப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில்  318ஓட்டுநர் நடத்துனர்  காலி பணியிடங்களும் நிரப்பப்படும் என சாலை போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
வேலை வாய்ப்பு
அரசு வேலை
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு
தமிழ் செய்திகள்
அரசு திட்டம்
சென்னை
டிஎன்எஸ்டிசி
அரசு பேருந்து

Latest Videos
Recommended Stories
Recommended image1
தென் தமிழகத்தை ரவுண்டு கட்டப்போகும் மழை.. 'இந்த' 2 மாவட்ட மக்கள் உஷாரா இருங்க.. வானிலை அப்டேட்!
Recommended image2
4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. தமிழகத்தில் இன்று கனமழை கொட்டப்போகுது.. எங்கெல்லாம் தெரியுமா?
Recommended image3
திமுகவை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்..! மதுரையில் கெத்து காட்டிய முதல்வர் ஸ்டாலின்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved