Covid: திறக்கப்பட்ட மறுநாளே மூடப்படும் பள்ளிகள்? 2 வாரங்கள் பள்ளிகளை மூட முடிவு?
புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பை இரண்டு வார காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.

Schools Holiday
புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன், புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. பரிசோதனைகள் குறைவாக உள்ள நிலையில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் இருமல், காய்ச்சல், சளியுடன் அவதிப்படுகிறார்கள்.
Covid
எனவே மனித உயிர் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் புதுச்சேரி மாநில கல்வித்துறையும், சுகாதாரத் துறையும் அலட்சியம் கட்டாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி மாணவர்கள் பாதிக்காத வகையில் பள்ளி விடுமுறையை இரண்டு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்ய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
Anbalagan
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில் ஞானசேகரன் மட்டுமே பலிகடாவாக்கப்பட்டுள்ளார், இந்த வழக்கில் பலர் தப்பித்து இருக்கிறார்கள், அவசரக்கதியில் திமுக அரசு அவருக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளது.இந்த விவகாரத்தில் பல்வேறு சமூக அமைப்புகள் மேலும் பலருக்கு தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த வழக்கில் மத்திய அரசின் ஏஜென்சியான சிபிஐ மேல்முறையீடு செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.